சினிமா

திரைப்பட படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட தீவிபத்து : நூலிழையில் உயிர்தப்பிய பிரபல தமிழ் ஹீரோ !

சின்னத்திரை படப்பிடிப்பின்போது நடிகர் ஸ்ரீகுமாரின் கால்களில் தீ பற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட தீவிபத்து : நூலிழையில் உயிர்தப்பிய பிரபல தமிழ் ஹீரோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் 'வானத்தைப்போல'. இந்த தொடரில் நாயகனாக நடிப்பவர் ஸ்ரீகுமார். பல தொடர்களில் நடித்து வெற்றிகரமான சின்னத்திரை நாயகனாக வளம் வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'வானத்தைப்போல' தொடரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஸ்ரீகுமார் கருப்பசாமி கெட்டப்பில் உடை அணிந்து எதிரியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கையில் அருவாளும் ஒரு கையில் தீ பந்தத்தையும் வைத்துக்கொண்டு இவர் சண்டை போடும்போது எதிர்பாராத விதமாக இவருடைய கையில் இருந்த தீப்பந்தத்தின் நெருப்பு கீழே விழுந்து இவருடைய கால்களில் பட்டுள்ளது.

இது தொடர்பான வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், " கடவுளுக்கு நன்றி..!! நல்ல வேலையாக நானும் என்னோடு சண்டையிட்டவரும் தீயில் அகப்படாமல் தப்பிவிட்டோம். சண்டை எப்போதும் ஆபத்தானது தான் ஆனால் அதை நான் ரசிக்கிறேன் " என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி, படப்பிடிப்பின்போது கவனமாக இருக்குமாறு கூறிவருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories