வைரல்

குழந்தைக்கு 'பக்கோடா' என பெயர் வைத்த பெற்றோர்..இணையத்தை கலக்கிய பதிவு.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

தம்பதி ஒருவர் தங்களுக்கு மிகவும் பிடித்த உணவான பக்கோடா என்ற பெயரையே தங்கள் குழந்தைக்கு வைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

குழந்தைக்கு 'பக்கோடா' என பெயர் வைத்த பெற்றோர்..இணையத்தை கலக்கிய பதிவு.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து நாட்டில் உள்ள நியூடவுன்பெர்ரி என்ற இடத்தில் உள்ள கேப்டன்ஸ் டேபிள் என்ற உணவகம் பேஸ்பூக்கில் பதிவிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில், எங்கள் உணவகத்தில் விற்கப்படும் பக்கோடா ஒன்று வாடிக்கையாளராக தம்பதிக்கு பிடித்துப்போனதால் தங்கள் குழந்தைக்குப் பக்கோடா என பெயரிட்டு உள்ளதாக கூறியுள்ளது. மேலும் அந்த குழந்தையின் படத்தைப் பதிவிட்டு "பக்கோடாவை உலகிற்கு வரவேற்கிறோம்" என்றும் கூறியுள்ளது.

குழந்தைக்கு 'பக்கோடா' என பெயர் வைத்த பெற்றோர்..இணையத்தை கலக்கிய பதிவு.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பலரும் இதைக் குறிப்பிட்டு பக்கோடா உள்ளிட்ட இந்திய உணவுகளின் ருசி குறித்து பதிவிட்டு வந்தனர். மேலும், பலர் பிடித்த உணவுகள் பெயரை வைத்தால் என்னவாகும் என்று விமர்சிக்கவும் செய்தனர்.

இந்த நிலையில், சர்ச்சைக்கு காரணமாக கேப்டன்ஸ் டேபிள் என்ற உணவகத்தின் உரிமையாளர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், தங்களின் முந்தைய பதிவு உண்மை இல்லை என்றும் விளையாட்டாகவே அதைப் பதிவிட்டதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories