இந்தியா

டெல்லி - நொய்டா EXPRESS சாலையில் விழுந்த பெரும்பள்ளம்.. உ.பி அரசின் அவலத்தை விமர்சிக்கும் இணையவாசிகள் !

டெல்லி - நொய்டா EXPRESS சாலையில் திடீரென விழுந்த பெரும் பள்ளத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி - நொய்டா EXPRESS சாலையில் விழுந்த பெரும்பள்ளம்.. உ.பி அரசின் அவலத்தை விமர்சிக்கும் இணையவாசிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நொய்டாவையும் கிரேட்டர் நொய்டாவையும் இணைக்கும் 27-கிமீ நீளமுள்ள கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலையில் கடந்த 26ம் தேதி பாதாள சாக்கடை பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையில் 15-அடி நீளமும் இரண்டடி அகலமும் கொண்ட பகுதியில் விரிசல் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் வாகனங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

டெல்லிக்கு செல்லும் முக்கிய சாலையில் இத்தகைய பெரும் பள்ளம் ஏற்பட்டதால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஒருநாள் முழுக்க அந்த பகுதியில் வாகனங்கள் ஊன்று சென்றதாக போக்குவரத்து போலிஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து விரிசலை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் அடுத்தநாள் காலை அந்த பள்ளம் முழுதும் சரிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை உத்தர பிரதேச பாஜக ஆட்சியில் அமைக்கப்பட்டதால் அதன் தரத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த திடீர் பள்ளம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

banner

Related Stories

Related Stories