இந்தியா

திடீரென விழுந்த விரிசல்.. சில நிமிடங்களில் 50 அடி பள்ளத்தில் புதைந்த வீடு.. மராட்டியத்தில் பரபரப்பு !

மராட்டியத்தில் வீடு இடிந்து 50 அடிக்கு கீழே சென்றுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென விழுந்த விரிசல்.. சில நிமிடங்களில் 50 அடி பள்ளத்தில் புதைந்த வீடு.. மராட்டியத்தில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் நகரில் இருக்கும் குகூஸ் என்ற பகுதியில் உள்ள வீட்டில் கஜ்ஜூ மாதவி என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் திடீர் என லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறினர்.

தங்கள் வீட்டிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் கஜ்ஜூ மாதவியின் குடும்பமும் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இதன் பின்னர்தான் அங்கு அதிர்ச்சியே ஆரம்பித்தது.

இந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களில் கஜ்ஜூ மாதவியின் வீடு இடிந்து 50 அடிக்கு கீழே சென்றுள்ளது. முதலில் வீட்டில் சிறிது குழி ஏற்பட்ட நிலையில், திடீரென ஒரு சிறிய பொத்தல் விழுந்துள்ளது. இதனையடுத்து பொத்தலின் அளவு அதிகரித்த நிலையில் வீடு முழுவதும் இடிந்து நிலம் கீழே சென்றுள்ளது.

இது தொடர்பான தகவல் வெளிவந்ததும் புவியியலாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியது. அதில் இந்த பகுதியில் முன்பு சுரங்கங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், அருகில் ஓடும் நதியின் படுகையும் இந்த பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories