இந்தியா

25 அடி பள்ளத்தில் விழுந்த டாடா கார்.. சிறு கீறல்கூட இல்லாமல் தப்பித்த குடும்பம்!

கேரளாவில் டாடா கார் 25 அடி பள்ளத்தில் விழுந்தும் அதில் பயணம் செய்த 4 பேருக்குச் சிறிய காயங்கள் கூட ஏற்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 அடி பள்ளத்தில் விழுந்த டாடா கார்.. சிறு கீறல்கூட இல்லாமல் தப்பித்த குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் ஒ டாடா டியாகோ காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே ஏதோ ஒன்று வந்துள்ளது. இதனால் காரின் ஓட்டுநர் அதன் மீது மோதாமல் இருக்கக் காரை திருப்பியுள்ளார்.

அப்போது கார் சாலை அருகே இருந்த 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. மேலும் அங்கிருந்த வீட்டின் கான்கிரீட் தளத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேருக்கும் எந்த ஒரு சிறிய காயங்கள் கூட ஏற்படவில்லை.

25 அடி பள்ளத்தில் விழுந்த டாடா கார்.. சிறு கீறல்கூட இல்லாமல் தப்பித்த குடும்பம்!

மேலும் அவர்கள் 4 பேரும் பத்திரமாக காரைவிட்டுவெளியே வந்துள்ளனர். அந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்துப் பேசிய காரின் உரிமையாளர், "டாடா கார் வாங்க வேண்டாம் என அனைவரும் என்னிடம் சொன்னார்கள்.

ஆனால், நான் இவர்கள் பேச்சைக் கேட்காமல் டாடா காரை வாங்கினேன். தற்போது இந்த கார்தான் தனது குடும்பத்திற்கு இரண்டாவது வாழ்க்கையைக் கொடுத்துள்ளது. அதனால் டாடா நிறுவன உரிமையாளர்களக்கு நன்றி. விபத்தில் கார் சேதமடைந்துள்ளது.

25 அடி பள்ளத்தில் விழுந்த டாடா கார்.. சிறு கீறல்கூட இல்லாமல் தப்பித்த குடும்பம்!

புதிய கார் வாங்க தற்போது பணம் இல்லை. ஆனால் நான் அடுத்து டாடா நெக்ஸான் காரை வாங்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார். 25 அடி பள்ளத்தில் விழுந்த டாடா டியாகோ கார் குளோபல் என்கேப் பாதுகாப்புச் சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories