இந்தியா

காரை ஓட்டி பார்ப்பதாகக் கூறி திருடிச் சென்ற கேரள வாலிபர்.. விரட்டிச் சென்று பிடித்த போலிஸ்!

புதுச்சேரியில் காரைஓட்டிப்பார்பதாக கூறி திருடிச் சென்ற கேரள வாலிபரை போலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

காரை ஓட்டி பார்ப்பதாகக் கூறி திருடிச் சென்ற கேரள வாலிபர்.. விரட்டிச் சென்று  பிடித்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (41). இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். தனக்குச் சொந்தமான கார் ஒன்றை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்த நபர் ஒருவர், குமரனைத் தொடர்பு கொண்டு காரை விலை பேசினார். அப்போது அந்த காரை தான் வாங்கிக்கொள்வதாகவும் கூறினார்.

மேலும் லாஸ்பேட்டைக்கு வந்த நபர், காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று குமரனிடம் கூறினார். இதையடுத்து குமரன் அவரை வரவழைத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த அந்த நபரிடம், குமரன் கார் சாவியைக் கொடுத்து ஓட்டிப்பார்க்கும் படி கூறியுள்ளார்.

காரை ஓட்டி பார்ப்பதாகக் கூறி திருடிச் சென்ற கேரள வாலிபர்.. விரட்டிச் சென்று  பிடித்த போலிஸ்!

இதையடுத்து அந்த நபர், காரை எடுத்துக் கொண்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றார். புதுவை எல்லை அருகே சென்றபோது சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குமரன் கீழே இறங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த குமரன், இதுபற்றி லாஸ்பேட்டை காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். உடனே புதுச்சேரி போலிஸார், தமிழக போலிஸாரை உஷார் படுத்தினர். மேலும் லாஸ்பேட்டை போலிஸாரும் அந்த காரை தேடிச்சென்றனர்.

காரை ஓட்டி பார்ப்பதாகக் கூறி திருடிச் சென்ற கேரள வாலிபர்.. விரட்டிச் சென்று  பிடித்த போலிஸ்!

பின்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலிஸார் அந்த வழியாக வந்த காரை மடக்கிப் பிடித்தனர். காரை ஓட்டிவந்த நபரைக் கைது செய்து புதுச்சேரி லாஸ்பேட்டை போலிஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம் குருவாயூரை சேர்ந்த முகமது அஸ்லாம் (24) என்பது தெரியவந்தது.

இவர் மீது தமிழகம், புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories