இந்தியா

அமித்ஷா செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தெலங்கானா பாஜக தலைவர்.. வலுக்கும் கண்டனம்: அதிர்ச்சி வீடியோ!

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா செருப்பை பா.ஜ.க மாநில தலைவர் கையால் எடுத்துக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அமித்ஷா செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தெலங்கானா பாஜக தலைவர்.. வலுக்கும் கண்டனம்: அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம் முனுகோடு பகுதியில் பா.ஜ.க-வின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். பின்னர் இக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாளி மாதா கோயிலுக்கு அமித்ஷா சென்று வழிபட்டார்.

பிறகு அவர் கோயிலில் இருந்து வெளியே வந்தார். அப்போது தெலங்கானா பா.ஜ.க தலைவர் பண்டி சஞ்சய் குமார், அமித்ஷாவின் செருப்பை கையால் எடுத்து அவரிடம் கொடுக்கிறார். பிறகு அவர் செருப்பைக் காலில் மாட்டிக் கொண்டு அங்கிருந்து நடந்து செல்கிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்குப் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அமித்ஷா செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தெலங்கானா பாஜக தலைவர்.. வலுக்கும் கண்டனம்: அதிர்ச்சி வீடியோ!

இந்நிலையில் தெலங்கானா முதல்வரின் மகன் கே.டி.ராமராவ், தெலங்கானாவின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், ‘மாநில மக்கள் குஜராத்தின் அடிமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெலங்கானாவின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் எந்த முயற்சியையும் முறியடிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories