இந்தியா

ஒரு தலை காதலால் நேர்ந்த கொடூரம் : பள்ளி மாணவியை சுட்ட மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ - நடந்தது என்ன ?

பட்டப்பகலில் ரோட்டில் மர்மநபர் ஒருவர் பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தலை காதலால் நேர்ந்த கொடூரம் : பள்ளி மாணவியை சுட்ட மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ - நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்துள்ள சிபாரா என்ற பகுதியில் பழ வியாபாரியின் 15 வயதுடைய மகள் அந்த பகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி அந்த பகுதியில் டியூசன் போவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை டியூசன் முடித்து மாணவி திரும்பி கொண்டிருந்த நேரத்தில், மர்ம நபர் ஒருவர் அவரை நோட்டமிட்டுள்ளார். அப்போது அந்த மாணவி வருவதை அறிந்த மர்ம நபர் திடீரென்று தனது கை பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாணவியின் பின் தலையில் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி சுருண்டு விழுந்ததை கண்டதும், அந்த நபர் அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார்.

ஒரு தலை காதலால் நேர்ந்த கொடூரம் : பள்ளி மாணவியை சுட்ட மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ - நடந்தது என்ன ?

இதையடுத்து சுருண்டு விழுந்து கிடந்த மாணவியை கண்ட பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கு தகவலும் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், "பள்ளி மாணவி சுடப்பட்டதற்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகிறோம். ஒருவேளை இது ஒரு தலை காதல் விவகாரமாக கூட இருக்கலாம். எதுவானாலும், மாணவி குணமடைந்ததும் அவரிடம் இது குறித்து விசாரணை நடைபெறும்". குற்றவாளி விரைவில் கண்டறியப்படுவார்" என்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடுரோட்டில், பட்டப்பகலில் மாணவி சுடப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories