இந்தியா

ஒரு மின்சார ரயில் இன்ஜினில் கூட கழிவறை கிடையாது..ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு!

இந்தியா முழுவதும் இயக்கப்படும் மின்சார ரயில் இன்ஜின்களில் வெறும் 120-ல் மட்டுமே கழிவறை வசதி உள்ளதும் அதிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மின்சார ரயில் இன்ஜினில்  கூட கழிவறை கிடையாது..ஒன்றிய அரசால் தொடர்ந்து  புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவுக்கு மிக அதிக அளவு வருமானம் ஈட்டித்தரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால், ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது. அதிலும் ரயில்வே துறையில் தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இந்திய ரயில்வேயின் அதிக வருமானம் ஈட்டிதரும் பிரிவாக தமிழ்நாடு,கேரளா போன்ற பகுதிகளை கொண்ட தெற்கு ரயில்வே இருந்து வருகிறது. ஆனால், ரயில்வேயின் பெரும்பாலான நிதிஒதுக்கீடு வடமாநிலங்களுக்கே செலவழிக்கப்படுகிறது.

ஒரு மின்சார ரயில் இன்ஜினில்  கூட கழிவறை கிடையாது..ஒன்றிய அரசால் தொடர்ந்து  புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு!

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு ரயில் இன்ஜின்களில் கழிவறை அமைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதிலும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்குரயில்வே புறக்கணிக்கப்பட்டுள்ளது தற்போது வெளிவந்துள்ளது.

திட்டம் அமல்படுத்தப்பட்ட 3 ஆண்டுகளில் 120 ரயில் என்ஜின்களில் மட்டுமே கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் 26, கிழக்குக் கடற்கரை ரயில்வேயில் 28 , தென் மத்திய ரயில்வேயில் 27, மேற்கு மத்திய ரயில்வேயில் 16 , மத்திய ரயில்வேயில் 15,தென்கிழக்கு ரயில்வேயில் 5, கிழக்கு ரயில்வே, வடகிழக்கு எல்லை ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகியவற்றில் தலா ஒன்று என மொத்தம் 120 ரயில் என்ஜின்களில் மட்டும் கழிவறை வசதி உள்ளது.

ஒரு மின்சார ரயில் இன்ஜினில்  கூட கழிவறை கிடையாது..ஒன்றிய அரசால் தொடர்ந்து  புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு!

தற்போதைய நிலையில், தொலைதூரம் செல்லும் இதுபோன்ற மின்சார இன்ஜின்களில் பெண்களும் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் மின்சார இன்ஜின்களில் கழிவறை இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories