இந்தியா

நடுரோட்டில் அமர்ந்து மது குடித்த Instagram பிரபலம் : காப்பு மாட்டிய காவல்துறை!

நடுரோட்டில் அமர்ந்து மது குடித்த Instagram பிரபலம் பாபி கட்டாரியாவை போலிஸார் கைது செய்துள்ளனர்.

நடுரோட்டில் அமர்ந்து மது குடித்த Instagram பிரபலம் : காப்பு மாட்டிய காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரகாண்ட மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் Instagram பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு வருகிறார். இவரது Instagram பக்கத்தில் இவர் வெளியிடும் வீடியோக்கள் எப்போதும் சர்ச்சை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக டேராடூனில் நடுரோட்டு நாற்காலி போட்டு அமர்ந்து மது குடிப்பது போன்று ஒரு வீடியோவை தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து போலிஸார் பாபி கட்டாரியாவை கைது செய்துள்ளனர். மேலும் இவர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சிகரெட் பற்றவைப்பது போன்ற வீடியோவும் இணையத்தில் வைரலானது. இது குறித்து போலிஸார், இது பழைய வீடியோ எனவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

நடுரோட்டில் அமர்ந்து மது குடித்த Instagram பிரபலம் : காப்பு மாட்டிய காவல்துறை!

மேலும் விமானத்தில் சிகரெட் பிடிக்கும் வீடியோ குறித்தும் பாபி கட்டாரியா மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடுரோட்டில் அமர்ந்து Instagram பிரபலம் பாபி கட்டாரியா மது குடித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories