இந்தியா

சமந்தா பட பாணியில் காரை அந்தரத்தில் நிறுத்திய பெண் ஓட்டுநர்.. பதைபதைக்க வைக்கும் நிகழ்வு !

கார் ஓட்டும்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர், தனது காரை சுவர் ஒன்றில் அந்தரத்தில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா பட பாணியில் காரை அந்தரத்தில் நிறுத்திய பெண் ஓட்டுநர்.. பதைபதைக்க வைக்கும் நிகழ்வு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் சாலையில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது அந்த காரை ஓட்டிய ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் அந்த கார் பறந்து அந்த சாலையில் இருந்த தடுப்பு சுவர் ஒன்றின் மேல் தொங்கியபடி நின்றுள்ளது.

சமந்தா பட பாணியில் காரை அந்தரத்தில் நிறுத்திய பெண் ஓட்டுநர்.. பதைபதைக்க வைக்கும் நிகழ்வு !

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் பரபரத்து போய், உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கிரேனை கொண்டு சுவரில் அந்தரத்தில் தொங்கிய காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சமந்தா பட பாணியில் காரை அந்தரத்தில் நிறுத்திய பெண் ஓட்டுநர்.. பதைபதைக்க வைக்கும் நிகழ்வு !

இதனிடையே அந்த கார் சுமார் 25 அடி உயரத்தில் தொங்கியதால், கீழே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர். பிறகு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காரை ஒட்டியது ஒரு பெண் என்றும், அந்த காரில் உள்ள பிரேக் Failure ஆனதால் அவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

banner

Related Stories

Related Stories