இந்தியா

மண்ணுக்கடியில் இருந்து வந்த அழுகை சத்தம்.. உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - பதறி மீட்ட விவசாயி !

பச்சிளம் பெண் குழந்தையை மண்ணுக்கடியில் உயிருடன் புதைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணுக்கடியில் இருந்து வந்த அழுகை சத்தம்.. உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - பதறி மீட்ட விவசாயி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குஜராத் மாநிலம் சபர்கந்தா பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் சம்பவத்தன்று காலை தனது நிலத்தில் விவசாயம் செய்ய சென்றுள்ளார். அப்போது ஒரு குழந்தையின் அழுகை குரல் கேட்டுள்ளது. இதையடுத்து சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று அவர் அங்கும் இங்கும் சுற்றி பார்க்கையில், எதுவும் தெரியவில்லை. இதையடுத்து கீழே பார்த்திருக்கிறார் அப்போது ஒரு பிஞ்சு கை தெரிந்துள்ளது.

இதையடுத்து அவரது வயலுக்கு அருகே உள்ள மின்சார வாரியத்தில் பணிபுரியும் வேலையாட்களின் உதவியோடு மண்ணுக்குள் இருக்கும் அந்த பிஞ்சு குழந்தையை மீட்டனர். இதையடுத்து அந்த குழந்தையை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதோடு, அந்த குழந்தை அருகில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

மண்ணுக்கடியில் இருந்து வந்த அழுகை சத்தம்.. உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - பதறி மீட்ட விவசாயி !

இது குறித்து விவசாயி கூறுகையில், "நேற்று காலை வழக்கம்போல் நான் வேலைக்காக எனது விவசாய நிலத்திற்கு சென்றேன். அப்போது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. பிறகு மண் மேல் ஒரு பிஞ்சு குழந்தையின் கை தெரிந்தது. இதனால் நான் பதறிப்போய், எனது நிலத்துக்கு அருகே இருக்கும் மின்வாரிய ஊழியர்களை அழைத்தேன்.

அவர்களும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மண்ணுக்கடியில் இருந்த அந்த பிஞ்சு குழந்தையை மீட்டனர். குழந்தையை ஆழமாக புதைக்கவில்லை என்பதால், குழந்தையை எங்களால் எளிதில் மீட்க முடிந்தது. புதைக்கப்பட்டது ஒரு பெண் குழந்தை. குழந்தையை யார் புதைத்தார்களோ, அவர்கள் காலையில் தான் புதைத்திருக்க வேண்டும். தற்போது குழந்தை பாதுகாப்பாக உள்ளது" என்றார்.

மண்ணுக்கடியில் இருந்து வந்த அழுகை சத்தம்.. உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - பதறி மீட்ட விவசாயி !

மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "அந்த பெண் குழந்தை பிறந்து சில நாட்கள் தான் இருக்கும். இருப்பினும் அந்த குழந்தையை இங்கு யார் புதைத்து சென்றது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை தற்போது மருத்துவமனையில் நலமாக உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

பச்சிளம் பெண் குழந்தையை மண்ணுக்கடியில் உயிருடன் புதைத்து வைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories