இந்தியா

'கன்னத்தில் அறைந்து விடுவேன்'.. பா.ஜ.க கவுன்சிலரை வசைபாடிய அதே கட்சியை சேர்ந்த பெண் நகராட்சி தலைவர்!

கேரளாவில் பா.ஜ.க கவுன்சிலரை அதே கட்சியை சேர்ந்த நகராட்சி பெண் தலைவர் திட்டும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கன்னத்தில் அறைந்து விடுவேன்'.. பா.ஜ.க கவுன்சிலரை வசைபாடிய அதே கட்சியை சேர்ந்த பெண் 
நகராட்சி தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், பத்தணம் திட்டம் மாவட்டத்திற்கு உட்பட்ட பந்தளம் நகராட்சியின் தலைவராக இருப்பவர் சுசீலா சந்தோஷ். இவர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் அதே பகுதியில் பா.ஜ.க கவுன்சிலராக உள்ள பிரபா என்ற இளைஞர் நகராட்சி தலைவர் சுசீலா சந்தோஷை கிண்டல் அடித்து சமூகவலைதளத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

'கன்னத்தில் அறைந்து விடுவேன்'.. பா.ஜ.க கவுன்சிலரை வசைபாடிய அதே கட்சியை சேர்ந்த பெண் 
நகராட்சி தலைவர்!

இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கொண்ட இருவரும் ஒருவரை மாறி ஒருவர் திட்டிக்கொண்டனர். அப்போது ஆவேசமடைந்த நகராட்சி தலைவி சுசீலா சந்தோஷ், நாயே எனவும் உன் கன்னத்தில் அறைந்து விடுவேன் என கடுமையான சொற்களைப் பயன்படுத்தி கவுன்சிலர் பிரபாவை திட்டியுள்ளார்.

'கன்னத்தில் அறைந்து விடுவேன்'.. பா.ஜ.க கவுன்சிலரை வசைபாடிய அதே கட்சியை சேர்ந்த பெண் 
நகராட்சி தலைவர்!

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories