இந்தியா

படப்பிடிப்பின் போது சக ஊழியர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகர்.. அதிர்ச்சி வீடியோ!

கன்னட தொலைக்காட்சி நடிகர் சந்தன் குமார் படப்பிடிப்பின் போது சக ஊழியர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பின் போது சக ஊழியர்களால் தாக்கப்பட்ட  பிரபல நடிகர்.. அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல் நடிகராக இருப்பவர் சந்தன் குமார். இவர் 'ஸ்ரீமதி ஸ்ரீனிவாஸ்' என்ற நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது.

இதற்காக நடிகர் சந்தன்குமார் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். அப்போது ஒளிப்பதிவாளரிடம் சாந்தகுமார் ஏதோ சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த டெக்னீஷியன் ஒருவர் நடிகர் சந்தன்குமாரை அடித்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்த படக்குழுவினர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் தனது செயலுக்கு நடிகர் சந்தன் குமார் மன்னிப்பு கேட்டும் பிரச்சனை சுமுகமாக முடியவில்லை. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய நடிகர் சந்தன் குமார்," இது ஒரு சிறிய சம்பவம். இந்த சம்பவம் நடக்கும் முன், நான் கொஞ்சம் டென்ஷனாக இருந்தேன். ஏனென்றால் என் அம்மாவுக்கு இதயப் பிரச்சனை இருந்ததால் அவரை நான் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தேன்.

படப்பிடிப்பின் போது சக ஊழியர்களால் தாக்கப்பட்ட  பிரபல நடிகர்.. அதிர்ச்சி வீடியோ!

அந்த நேரத்தில் தான் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் வந்தேன். ஆனால் இங்கு முறையான படப்பிடிப்பு நடைபெறவில்லை. எனக்கு தலைவலி வேறு. அதனால், படப்பிடிப்பில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டுத் தூங்கச் சென்றேன். இதனால் படப்பிடிப்பின்போது பிரச்சனையாகிவிட்டது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories