இந்தியா

நூடுல்ஸில் கலந்திருந்த எலி மருந்து.. இளம் பெண் பரிதாப பலி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூடுல்ஸில் கலந்திருந்த எலி மருந்து.. இளம் பெண் பரிதாப பலி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்தவர் ரேகா நிஷாத் (30). இவர் தனது கணவருடன் பாசில்வாடி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையிலிருந்து நூடுல்ஸ் பாக்கெட் வாங்கி வந்து சமைத்து சாப்பிடுள்ளார்.

அவர் சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவருக்கு சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.

இதனிடையே இதுதொடர்பாக போலிஸார் ரேகாவிடம் விசாரித்தபோது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் தாக்காளியில் எலி மருந்து வைத்துள்ளனர். அதனை தெரியாமல் சமையலுக்கு பயன்படுத்தியுள்ளார் என தெரியவந்தது. மேலும் சமைக்கும் போது செல்போனில் பேசிக்கொண்டே சமைத்ததால் இந்த கவனக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனிடையே தீவிர சிகிச்சைப் பெற்று வந்த ரேகா சிகிச்சை பலனிறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் போலிஸார் இதுதொடர்பாக ரேகாவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories