இந்தியா

’மலரே மவுனமா’ பாடல் பாடிய மருத்துவர்.. உடன்பாடிய நோயாளி: அறுவை சிகிச்சையின்போது நடந்த இசை கச்சேரி!

கேரளாவில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவரும், நோயாளியும் தமிழ் பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’மலரே மவுனமா’ பாடல் பாடிய மருத்துவர்.. உடன்பாடிய  நோயாளி: அறுவை சிகிச்சையின்போது நடந்த இசை கச்சேரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 14 வயது சிறுமி ஒருவர் காலி சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமிக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அச்சிறுமி தனக்கு வலிக்கிறது என கூறியுள்ளார்.

’மலரே மவுனமா’ பாடல் பாடிய மருத்துவர்.. உடன்பாடிய  நோயாளி: அறுவை சிகிச்சையின்போது நடந்த இசை கச்சேரி!

இதனால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் முகம்மது ரியீஸ், தமிழ்ப்படமான 'கர்ணா' படத்தில் வரும் 'மலரே மௌனமா' என்ற பாடலை பாடினார். அப்போது அவருடன் சேர்ந்து சிறுமியும் அந்த பாடலை முணுமுணுத்துள்ளார்.

’மலரே மவுனமா’ பாடல் பாடிய மருத்துவர்.. உடன்பாடிய  நோயாளி: அறுவை சிகிச்சையின்போது நடந்த இசை கச்சேரி!

இவர்கள் இருவரும் பாடுவதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories