இந்தியா

கண்டித்த காதலி.. தலையை தனியே எடுத்து கொண்டு போலிஸ் ஸ்டேசன் வந்த காதலன் : கர்நாடகாவில் அதிர்ச்சி !

தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்த காதலனை கண்டித்த காதலி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டித்த காதலி.. தலையை தனியே எடுத்து கொண்டு போலிஸ் ஸ்டேசன் வந்த காதலன் : கர்நாடகாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு (25). இவர், இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா( 23), என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இருவரும் நீண்ட நாள் காதலித்த வந்த நிலையில் சீக்கிரம் திருமணம் செய்யுமாறு போஜராஜுவை நிர்மலா கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் போஜராஜு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த நிர்மலா போஜராஜுவை சந்தித்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இவர்களின் இந்த செயல் போஜராஜு மனைவிக்கு தெரிந்து அவர் போஜராஜுவோடு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

கண்டித்த காதலி.. தலையை தனியே எடுத்து கொண்டு போலிஸ் ஸ்டேசன் வந்த காதலன் : கர்நாடகாவில் அதிர்ச்சி !

இந்த நிலையில், நிர்மலா நேற்று தன் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற போஜராஜு நிர்மலாவிடம் சண்டை போட்டுள்ளார். இது முற்றிய நிலையில், தான் கொண்டுவந்திருந்த கத்தியால் நிர்மலா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் நிர்மலாவின் தலையை துண்டித்து கானஹொசஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார். இளம்பெண்ணின் தலையோடு ஒருவர் வந்ததை கண்ட போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories