இந்தியா

இராணுவ வீரர்களுக்கு உடல் உறுப்பு தானம்.. இளம்பெண்ணின் செயலால் நெகிழ்ந்த ஊர் மக்கள் !

மூளைச்சாவு அடைந்த இளம்பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்ததில், 5 பேரின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவ வீரர்களுக்கு உடல் உறுப்பு தானம்.. இளம்பெண்ணின் செயலால் நெகிழ்ந்த ஊர் மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மூளைச்சாவு அடைந்த இளம்பெண் ஒருவரின் உடல் உறுப்புகள், புனேவில் உள்ள கமாண்ட் ஹாஸ்பிட்டல் சதர்ன் கமாண்டில் (command hospital southern command) இராணுவ மருத்துவமனையில், பணியில் இருந்த இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக, அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர், ஆபத்தான கட்டத்தில் கமாண்ட் ஹாஸ்பிட்டல் கொண்டு வரப்பட்டார். அவர் பிழைப்பது கடினம் என்று எங்கள் அனைவர்க்கும் தெரிந்தது. இதையடுத்து அவர் இறந்துவிட்டார்.

அவர் ஏற்கனவே தனது உடல் உறுப்புக்களை தானம் செய்துள்ளது அவரது மறைவுக்கு பிறகே, அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளருடன் நடந்த நீண்ட ஆலோசனைக்கு பிறகு, அவரது உடல் உறுப்புக்கள் தேவையான நோயாளிகளுக்கு தானமாக வழங்க குடும்பத்தினர் சம்மதித்தனர்.

அதன்படி ஜூலை 14 மற்றும் ஜூலை 15 வரை, சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகள் இந்திய இராணுவத்தில் பணியாற்றும் இரண்டு வீரர்களுக்கு மூலம் பொருத்தப்பட்டன. மேலும் அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட கண்கள், ஆயுதப் படை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கண் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இராணுவ வீரர்களுக்கு உடல் உறுப்பு தானம்.. இளம்பெண்ணின் செயலால் நெகிழ்ந்த ஊர் மக்கள் !

அதுமட்டுமின்றி அவரது கல்லீரல் புனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக்கில் ஒரு நோயாளிக்கு கொடுக்கப்பட்டது. இறந்த பெண்ணின் உடல் உறுப்புக்கள், கடுமையான முயற்சிக்கு பிறகு 5 நோயாளிகளுக்கு அவரது உறுப்புக்கள் பொருத்தப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்கு உறுப்பு தானத்தின் விலை, மதிப்பற்ற பங்காக திகழ்கிறது" என்று குறிப்பிட்டிருந்தது.

இறந்த பின் உடல் உறுப்புக்கள் தானம் என்பது, நாம் இறந்த பின் நம் மூலம் பிற உயிர்களை வாழ வைக்கமுடியும் என்பதை உணர்த்தும் வகையில் இது போன்ற செயல் அமைகிறது. இளம்பெண்ணின் இந்த செயலால் 5 பேரின் உயிர் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories