இந்தியா

“PM மோடியின் பாணியா ? - செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்?” : முர்முக்கு கேள்வி எழுப்பிய யஷ்வந்த் சின்ஹா!

ஆளும்கட்சி வேட்பாளர் இதுவரை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூட பேசவில்லை. இது கவலையளிக்கிறது என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

“PM மோடியின் பாணியா ? - செய்தியாளர்களை சந்திக்காதது  ஏன்?” : முர்முக்கு கேள்வி எழுப்பிய யஷ்வந்த் சின்ஹா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக 2017ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா பயணம் மேற்கொண்டு வருகிறார்.

“PM மோடியின் பாணியா ? - செய்தியாளர்களை சந்திக்காதது  ஏன்?” : முர்முக்கு கேள்வி எழுப்பிய யஷ்வந்த் சின்ஹா!

மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் ஆதரவுக் கூட்டங்களில் மோடி அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். அந்தவகையில், பிரதமர் மோடி போல் பத்திரிக்கையாளரை சந்திக்காமல் ஆளும் கட்சி வேட்பாளர் இருப்பதாக யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அரசு நிறுவனங்கள் எதிர்க்கட்சியை முடக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. நான் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அமைச்சரவையில் இருந்துள்ளேன்.

அப்போது எதிர்க்கட்சிகளை முடக்க அமலக்காத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தும் எண்ணமும், யோசனையும் யாருக்கும் இருந்ததில்லை. ஆனால் இப்போது அமலக்காத்துறை, வருமான வரித்துறை ஆகிய இரண்டையும் வெட்கமின்றி பயன்படுத்தி வருகின்றனர்.

“PM மோடியின் பாணியா ? - செய்தியாளர்களை சந்திக்காதது  ஏன்?” : முர்முக்கு கேள்வி எழுப்பிய யஷ்வந்த் சின்ஹா!

மேலும் குடியரசுத்தேர்தலில் இப்போது இருக்கும் பரபரப்பான சூழல், எமர்ஜென்சி காலத்தில் கூட இருந்ததில்லை. அதுமட்டுமல்லாது நமது அரசியலமைப்பு அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. இதுதொடர்பாக நான் தொடர்ந்து பேசி வருகின்றேன்.

ஆனால் ஆளும்கட்சி வேட்பாளர் இதுவரை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூட பேசவில்லை. இது கவலையளிக்கிறது. இதுவரை 8 ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சியில் பிரதமர் மோடி ஒருமுறைக்கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அதேப்போல், திரெளபதி முர்முவும் செயல்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories