இந்தியா

“போனா வராது.. பொழுதுபோனா கிடைக்காது..” : வெறும் 26 ரூபாயில் விண்ணில் பறக்கலாம் - அசத்தல் அறிவிப்பு !

இந்தியாவிலிருந்து வியட்நாம் நாட்டிற்கும், வியட்நாமில் நாட்டில் இருந்து இந்தியாவுக்கும் விமான கட்டணம் வெறும் 26 ரூபாய் என்று வியட்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

“போனா வராது.. பொழுதுபோனா கிடைக்காது..” : வெறும் 26 ரூபாயில் விண்ணில் பறக்கலாம் - அசத்தல் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தாண்டு ஜூலை மாதத்தில் வந்த இரட்டை 07/07 நாளை முன்னிட்டு, வியட்ஜெட் விமான நிறுவனம் பயணிகளுக்கு ஒரு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. அது என்னவென்றால், இந்தியாவில் இருந்து வியட்நாம் நாட்டிற்கும், வியட்நாமில் நாட்டில் இருந்து இந்தியாவுக்கும் பயணிக்கும் பயண கட்டணம் வெறும் ரூ.26-க்கு பயணம் செய்யலாம் என அறிவித்தது. அதிலும் இந்த தள்ளுபடியை 7,77,777 விமான பயணிகளுக்கு வழங்கியுள்ளது.

“போனா வராது.. பொழுதுபோனா கிடைக்காது..” : வெறும் 26 ரூபாயில் விண்ணில் பறக்கலாம் - அசத்தல் அறிவிப்பு !

மேலும் இந்த ஆஃபர் ஒரு வார காலத்திற்கு மட்டுமே உண்டு என்றும் அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை 7 முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை இதற்கு முன்பதிவு செய்யலாம். வியட்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கு இந்த சிறப்பு டிக்கெட்டுகள் செல்லுபடியாகும். இந்த பயணத்திற்கான கால அளவு ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரை ஆகும்.

“போனா வராது.. பொழுதுபோனா கிடைக்காது..” : வெறும் 26 ரூபாயில் விண்ணில் பறக்கலாம் - அசத்தல் அறிவிப்பு !

வியட்ஜெட் விமான நிறுவனத்தின் இணையதளமான www.vietjetair.com என்ற இணையதளம் மூலம் இந்த டிக்கெட்டுக்களுக்கு முன்பதிவு செய்யலாம். இன்றுடன் இறுதி நாள் நிறைவடைகிறது என்பதால், இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories