பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கிராமம் ஒன்றில் கிராம பெண்கள் விறகு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது மயானம் அருகில் சிறுமி அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பேய் ஒன்று மயானத்தில் அழுதுகொண்டிருக்கிறது என கிராமத்தாரிடம் சென்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட கிராமத்தார், ஒன்று சேர்ந்து மயானத்துக்கு வந்துபார்த்துள்ளனர். அங்கு தரைக்கு அடியில் இருந்து சிறுமியின் சட்டம் கேட்டுள்ளது. இதனால் பதறியடித்தபடி அங்கு தரையை தோண்டியுள்ளனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
தரையின் அடியில் சிறுமி ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததும், அவர் வாயில் களிமண்ணை வைத்து அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் போலிஸார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அதிர்ச்சி உண்மை ஒன்று வெளிவந்துள்ளது.
சிறுமி கூறிய வாக்குமூலத்தில், சிறுமியின் பெயர் லாலி என்பதும், அவர் பாட்டி, மற்றும் அம்மா அவரை அங்கு அழைத்துவந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், மயானத்துக்கு வந்ததும் அவரது பாட்டியும், அம்மாவும் சிறுமியின் வாயில் களிமண்ணை வைத்து குழி தோண்டி உயிரோடு புதைத்ததும் தெரியவந்தது.
இதன் பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார், அவரது அம்மா, பாட்டி ஆகியோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.