இந்தியா

தூங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவி.. சுட்டு கொன்ற காதல் கணவன்.. பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன ?

தூங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவியை கணவரே சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவி.. சுட்டு கொன்ற காதல் கணவன்.. பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம் ஜெய்சிங்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 35). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில், இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். தற்போது இவருக்கு 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது உறவினர் பெண்ணான ரீட்டா தேவி என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, படன்பூர் கிராசிங் அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த போது, ரீட்டா தேவி கர்ப்பமாக இருந்துள்ளார்.

தூங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவி.. சுட்டு கொன்ற காதல் கணவன்.. பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன ?

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் வழக்கம்போல், இரவு ராஜ்குமாரும், ரீட்டா தேவியும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எழுந்த ராஜ்குமார் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி ரீட்டா தேவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த ரீட்டா தேவி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவி.. சுட்டு கொன்ற காதல் கணவன்.. பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன ?

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரீட்டா தேவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரீட்டா தேவியின் சகோதரி சீதா தேவி, தனது சகோதரியை ராஜ்குமார் கொலை செய்து விட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்து, எதற்காக ரீட்டா தேவியை கொலை செய்தார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணியான மனைவியை கணவரே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories