இந்தியா

எச்சரிக்கையை மீறி வீம்பாக காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 3 பேர் பலி !

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்து 3 பேரில் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் மாயமாகியுள்ளனர்.

எச்சரிக்கையை மீறி வீம்பாக காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 3 பேர் பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பல நதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அங்குள்ள நாக்பூரில் திருமண விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொள்ள பீட்டல் மாவட்டத்தில் உள்ள முல்ட்டாய் நகரைச் சேர்ந்த 8 பேர் காரில் வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பும்வழியில் சாவ்னேர் என்ற இடத்துக்கு வந்துள்ளனர்.

எச்சரிக்கையை மீறி வீம்பாக காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 3 பேர் பலி !

அப்போது அங்குள்ள ஒரு தரைப்பாலத்தில், கனமழை காரணமாக வெள்ளம் சென்றுகொண்டிருந்தது. அந்த பாலத்தை இவர்கள் சென்ற கார் கடந்து செல்ல முயன்றுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த காரை தடுத்து வெள்ளம் அதிகம் வருவதால் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

ஆனால், அதையும் மீறி அவர்கள் சென்ற கார் அந்த தரைபாலத்தை கடக்க முயன்றுள்ளது. தரைப்பாலத்தில் பாதி தூரம் சென்றநிலையில், வெள்ளத்தை மீறி காரால் செல்லமுடியவில்லை. உடனே பின்னோக்கி வர கார் ஓட்டுநர் முயன்றநிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

காரில் இருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையிலும், அங்கிருந்தவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. இந்த விபத்தில் இருவர் தப்பிய நிலையில் மீதம் இருந்தவர்கள் வெள்ள நீரில் காரோடு அடித்துச்செல்லப்பட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், கிரேன் உதவியுடன் காரை மீட்ட நிலையில் காருக்குள் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் கிடந்துள்ளன. மாயமான 3 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories