இந்தியா

காதலியுடன் தனிமையில் இருந்த நேரத்தில் காதலன் மரணம் : மரணத்திற்கான காரணம் குறித்து போலிஸ் வெளியிட்ட தகவல்!

நாக்பூரில் காதலியுடன் உடலுறவு கொள்ளும் போது இளைஞருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலியுடன் தனிமையில் இருந்த நேரத்தில் காதலன் மரணம் : மரணத்திற்கான காரணம் குறித்து போலிஸ் வெளியிட்ட தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பர்தேகியன். இளைஞரான இவர் செவிலியராக உள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் காதல் பற்றி அறிந்த பெற்றோர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். மேலும் விரைவில் இருவரின் திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் திட்டமிட்டு வந்துள்ளனர்.

காதலியுடன் தனிமையில் இருந்த நேரத்தில் காதலன் மரணம் : மரணத்திற்கான காரணம் குறித்து போலிஸ் வெளியிட்ட தகவல்!

இந்நிலையில் அஜயும், அவரது காதலியும் கடந்த ஞாயிறன்று நாக்பூரில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து ஒன்றாகத் தங்கியுள்ளனர். அப்போது இருவரும் தனிமையில் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

இதையடுத்து திடீரென அஜய் மயங்கி விழுந்துள்ளார். அவரை பலமுறை காதலி எழுப்பிப் பார்த்தும் எவ்வித அசைவும் இன்றி இருந்துள்ளார். இதனால் பயந்துபோன அவர் இது குறித்து விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

காதலியுடன் தனிமையில் இருந்த நேரத்தில் காதலன் மரணம் : மரணத்திற்கான காரணம் குறித்து போலிஸ் வெளியிட்ட தகவல்!

அவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் அஜயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விடுதி அறையைச் சோதனை செய்த போலிஸார் அங்கிருந்து வையாகரா மருந்தைக் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் அஜய் குடித்திருந்ததாகவும் போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

காதலியுடன் தனிமையில் இருந்த நேரத்தில் காதலன் மரணம் : மரணத்திற்கான காரணம் குறித்து போலிஸ் வெளியிட்ட தகவல்!

மேலும் உடலுறவு கொள்ளும்போது இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். உடலுறவு கொள்ளும் முன்பு அஜய் வையாகரா மருந்தை உட்கொண்டாரா என்பது குறித்து அவரது காதலியிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories