இந்தியா

ம.பி-யில் மனைவியை அடித்து தெரு தெருவாக இழுத்து சென்ற கணவன்: மக்கள் கும்பலாக நின்று வேடிக்கை பார்த்த அவலம்

மத்திய பிரதேசத்தில் மனைவியை அவரது கணவனே அடித்து தெருவில் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி-யில் மனைவியை அடித்து தெரு தெருவாக இழுத்து சென்ற கணவன்: மக்கள் கும்பலாக நின்று வேடிக்கை பார்த்த அவலம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் போர்படாவ் என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் தோடவா. இவரது மனைவி திடீரென மாயமாகியுள்ளார்.

இதனால், ராகுல் தோடவா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவரது மனைவி கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் தேடியபோது அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டில் மறைந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இளைஞர் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தது அவருக்கும்,ராகுல் தோடவா கணவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகுல் தனது மனைவியைச் சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார்.

பிறகு அவரது உறவினர்கள் ராகுலைத் தோல்மீது சுமக்கவைத்து அந்த பெண்ணை தெரு தெருவாக ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி-யில் மனைவியை அடித்து தெரு தெருவாக இழுத்து சென்ற கணவன்: மக்கள் கும்பலாக நின்று வேடிக்கை பார்த்த அவலம்

இதையடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்குச் சென்று அந்த பெண்ணை கொடுமைப் படுத்தியதாக ராகுல் உட்பட 14 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை அவரது கணவனே அடித்து தெருவில் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories