இந்தியா

“துரோக அரசியல் முதல் ஆட்சிக் கவிழ்ப்பு வரை..” : மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க செய்த சதி என்ன?

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவார். உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் செய்த ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

“துரோக அரசியல் முதல் ஆட்சிக் கவிழ்ப்பு வரை..” : மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க செய்த சதி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2019 முதலே உத்தவ் தலைமையிலான ‘மகா விகாஸ் அகாதி கூட்டணி’ அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, அந்த ஆட்சியைக் கவிழ்த்து பா.ஜ.க ஆதரவுடன் தற்போது முதல்வராகி இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மரபுகளை மீறி வியாழனன்று இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி ஆட்சியை இரண்டரை ஆண்டுகள் தீவிர முயற்சிக் குப்பின் ஒருவழியாக பா.ஜ.க கவிழ்த்தே விட்டது. இதனிடையே, சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே வுக்கு முதல்வர் பதவி, அவரைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி என்ற பேரத்தின் அடிப்படையிலேயே, உத்தவ் தலைமையிலான ‘மகா விகாஸ் அகாதி’ அரசை பா.ஜ.க வீழ்த்தியிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

சிவசேனா கட்சியை சூறையாடியதன் மூலம், உத்தவ் தாக்கரேவை அவராகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகும் சூழலை ஏற்படுத்திய பா.ஜ.க, ஜூலை 1 அன்று புதிய அரசை அமைக்கும்; தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவார். உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் செய்த ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

“துரோக அரசியல் முதல் ஆட்சிக் கவிழ்ப்பு வரை..” : மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க செய்த சதி என்ன?

ஆனால், எதிர்பாராத திருப்பமாக அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராக, பொறுப்பேற்பார்; அதுவும் ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்ன தாக ஜூன் 30 அன்று இரவே 7.30 மணிக்கு அவர் பதவி யேற்பார் என்று அறிவிக்கப்பட்டது பா.ஜ.க.வினருக்கே வியப்பாக செய்தியாக அமைந்து விட்டது. பா.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர பட்னவீஸும், அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் வியாழனன்று மாலை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து, ஆட்சி யமைக்க உரிமை கோரினர்.

அதைத் தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “மகாராஷ்டிர புதிய முதல்வராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார். தான் அரசில் இருந்து விலகி, அது சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வேன்” எனவும் அறிவித்தார். மேலும், ‘‘கடந்த இரண்டரை ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பல பிரச்னைகளை ஷிண்டே தலைமையிலான அரசு திறம்பட தீர்க்கும். மராத்தியர்கள், ஓ.பி.சி.க்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவு செய்வது ஆகியவை புதிய அரசின் முன்னுரிமைகளாக இருக்கும்.

பாலாசாகேப் தாக்கரே வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சிகளுடன் சிவசேனா சென்றது. உத்தவ் தாக்கரே அரசு ஊழலில் மூழ்கியதால், இரண்டு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறைக்குச் செல்ல வழிவகுத்தது’’ என்றும் பட்னாவிஸ் கூறினார். “ஷிண்டே முதல்வராக பதவி யேற்ற பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். சிவசேனா மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள்” என்றும் அறிவித்தார்.

“துரோக அரசியல் முதல் ஆட்சிக் கவிழ்ப்பு வரை..” : மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க செய்த சதி என்ன?

2019 சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவில், சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை தர மறுத்ததாலேயே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி அரசை அமைத்தார். ஆனால், தற்போது இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்காக, அதிருப்தி சிவசேனா தலைவரான ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை பா.ஜ.க விட்டுக் கொடுத்துள்ளது.

“தனக்கு ஒருகண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்கள் போக வேண்டும்” என்று பழிவாங்கும் நிலைப்பாடு எடுத்து, உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்த்துள்ளது. முன்னதாக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 16 பேரை தகுதிநீக்கம் செய்யும் மகாராஷ்டிர துணை சபாநாயகரின் நோட்டீஸை உச்ச நீதிமன்றம் தலையிட்டு நிறுத்தி வைத்திருந்த நிலையில், “மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகர் வியாழக்கிழமை அவையை கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு அதன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என்று ஆளுநர் கோஷ்யாரி செவ்வாயன்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.

பா.ஜ.க தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் செவ்வாயன்று இரவு 9.30 மணியளவில் மகா ராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியைச் சந்தித்து, “உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். கடிதம் ஒன்றையும் அளித்தார். அதைத்தொடர்ந்தே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவு என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால் அந்த செய்தியை முதலில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மறுத்தார். அதிகாரப்பூர்வமற்றது என்று கூறினார். ஆனால், சிறிது நேரத்தில் தனது நிலையை அவர் மாற்றிக் கொண்டு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அதிகாரப்பூர்வ மாகவே உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் இந்த திடீர் உத்தரவை எதிர்த்து சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

“துரோக அரசியல் முதல் ஆட்சிக் கவிழ்ப்பு வரை..” : மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க செய்த சதி என்ன?

“ஒரு குறிப்பிட்ட நபரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் கண்டறிந்து விட்டால் தகுதி நீக்கம் நடத்தப்படும் தேதி வரையில் அந்த குறிப்பிட்ட நபரை சட்டமன்ற உறுப்பினராக கருத முடியாது. மேலும், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையிலும் உள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் வக்க ளிக்க முடியும், அல்லது யார் வாக்களிக்க முடியாது என்பதே இன்னும் முடிவாகாமல் உள்ளது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்றது.

இதில் எங்களது தரப்பில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரு நபர் வெளிநாட்டில் உள்ளார். அப்படி இருக்கும் போது பெரும்பான்மையை எப்படி நிரூ பிக்க முடியும்? நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கி இருக்கக் கூடிய நிலையில் அதுவரையில் ஆளுநரால் காத்திருக்க முடியாதா? இந்த விவகாரத்தில் இத்தனை அவசரம் ஏன் என்பது புரியவில்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன்னதாகத்தான் ஆளுநர் கொரோனாவில் மீண்டு வருகிறார். இதையடுத்து செவ்வாய் கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்கிறார். உட னடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடுகிறார். முதல்வரிடம் ஆளுநர் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற நடைமுறையை அவர் பின்பற்றப்படவில்லை. ஒரு மாநிலத் தின் ஆளுநர் என்பவர் அந்த மாநிலத்தின் அமைச்சரவை குழுவின் அறிவுரைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டவர்.

எதிர்கட்சிகளின் ஆலோசனைக்கு இணங்கி நடக்கக்கூடிய வர் கிடையாது. ஆனால், ஆளுநரின் இதுபோன்ற செயல்பாடு கள் என்பது அரசியல் சாசனத்தின் பத்தாவது அட்டவணை யை சுக்குநூறாக ஆக்குவது போன்று உள்ளது. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று சுனில் பிரபு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

“துரோக அரசியல் முதல் ஆட்சிக் கவிழ்ப்பு வரை..” : மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க செய்த சதி என்ன?

ஆனால், எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் என்பது நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “பெரும்பான்மையை நிரூபிக்க ஆளு நர் பிறப்பித்த உத்தரவுக்கு தடையில்லை; நம்பிக்கை வாக்கெ டுப்பு நடத்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு, இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது’’ என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடை வாக அமைந்தது. இதனால் தீர்ப்பு வந்த சில மணி நேரங்க ளிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பு வரை காத்திருக்காமல், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார். இரவு 9.30 மணிக்கு தனது முகநூல் நேரலையில் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜி னாமா செய்வதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, தாக்கரே ராஜ்பவனுக்கு காரில் சென்றார். அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடன் சென்றார். அங்கு தனது ராஜினாமா கடி தத்தை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் நள்ளிரவு 11.44 மணியளவில் சமர்ப்பித்தார். அப்போது புதிய அரசு அமை யும் வரை முதல்வராக தொடருமாறு உத்தவ் தாக்கரே-வை ஆளுநர் கோஷ்யாரி கேட்டுக் கொண்டார். உத்தவ் தாக்கரே பதவி விலகலால், நம்பிக்கை வாக்கெ டுப்புக்கு அவசியமில்லாமல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 39 பேர், சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் என மொத்தம் 45 எம்.எல்.ஏ-க்கள் வியாழனன்று மும்பை வருவதாக இருந்தனர். ஆனால் அவர்கள் தற்போதைக்கு வரவேண்டாம்; புதிய அரசு பதவியேற்கும்போது வந்தால் போதும் என்று மகா ராஷ்டிர மாநில பா.ஜ.க தலைவர் சந்திர காந்த் பாட்டீல் கேட்டுக் கொண்டார். கோவா தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த சிவ சேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை கோவா மாநில பா.ஜ.க முதல்வர் பிரமோந்த் சாவந்தும் நேரில் சந்தித்து பேசினார்.

உத்தவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, புதனன்று இரவு முழுவதுமே மும்பையில் பா.ஜ.க தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். இந்தப் பின்னணியிலேயே, வியாழனன்று மாலை ஆளுநர் உடனான சந்திப்பிற்குப் பிறகு, அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிப்பு வெளியானது.

இது பா.ஜ.க தொண்டர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. எப்படியோ மீண்டும் அதிகாரத்திற்கு வரவுள்ள தால், இரண்டு நாட்களாகவே மகாராஷ்டிர பா.ஜ.க அலுவல கங்களுக்கு முன்பு தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வந்தனர். தேவேந்திர பட்னாவிஸூம் மிகுந்த நம்பிக்கையுடன் “நான் மீண்டும் வருவேன். புதிய மகாராஷ்டிராவை உருவாக்க நான் மீண்டும் வருவேன். ஜெய் மகாராஷ்டிரா” என்று வீடியோ பதிவு ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

ஆனால் எதிர்பாராத திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே மகா ராஷ்டிர முதல்வராக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மொத்த உறுப்பி னர்கள் எண்ணிக்கை 288 ஆகும். சிவசேனா எம்.எல்.ஏ ஒரு வர் இறந்துவிட்ட நிலையில், தற்போது சிவசேனாவுக்கு 55, தேசியவாத காங்கிரசுக்கு 53, காங்கிரசுக்கு 44, பா.ஜ.க.வுக்கு 106, பகுஜன் விகாஸ் அகாதி கட்சிக்கு 3, சமாஜ்வாதி, ஏ.ஐ.எம்.ஐ.எம், பிரகார் ஜனசக்தி கட்சிகளுக்கு தலா 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒன்று, சுயேட்சை களுக்கு 13 என உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பா.ஜ.க உறுப்பினர்கள் 106 பேர், அதிருப்தி சிவசேனா உறுப்பி னர்கள் 39 பேர், சுயேட்சை உறுப்பினர்கள் 11 பேர் உட்பட மொத்தம் 170 உறுப்பினர்களின் ஆதரவு ஏக்நாத் ஷிண்டே வுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

முகநூல் நேரலையில் உத்தவ் தாக்கரே உருக்கம்

எதிர்பாராத விதமாக அதிகாரத்திற்கு வந்தேன்; அது போலவே வெளியே செல்கிறேன்!

மும்பை, ஜூன் 30- மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து ராஜி னாமா செய்வதற்கு முன்னதாக உத்தவ் தாக்கரே முகநூல் நேரலை மூலமாக உரையாற்றினார். அப்போது, “எதிர்பாராத விதமாக அதிகா ரத்திற்கு வந்தேன்; அதே பாணியிலேயே தற்போது வெளியே செல்கிறேன்!” என்று உருக்கமாக கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: “இந்த தருணத்தில், என்னை ஆதரித்த என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சகாக் களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். சரத் பவார் மற்றும் சோனியா காந்தி ஆகியோ ருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் பெயர் மாற்றம் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இன்று எடுத்தபோது, மாநில அமைச்சரவையில் சிவசேனாவில் இருந்து அனில் பராப், சுபாஷ் தேசாய் மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் மட்டுமே என்னுடன் இருந்தனர்.

இந்த திட்டத்தை எதிர்ப்பதாக கூறப்பட்டவர் கள் காங்கிரஸூம், தேசியவாத காங்கிரஸூம்தான். ஆனால் அவர்கள் இன்று என்னுடன் இருக்கி றார்கள். ஒரு அரசாங்கமாக நான் செய்த முதல் வேலை ராய்காட் பாதுகாப்பிற்கு நிதி அளித்தது மற்றும் விவசாயிகளை கடனில் இருந்து விடு வித்தது. அதைவிட, எனது ஆட்சிக் காலத்தில் அவு ரங்காபாத்தை ‘சம்பாஜி நகர்’ என்றும், உஸ்மா னாபாத்தை ‘தாராஷிவ்’ என்றும் அதிகாரப்பூர்வ மாக பெயர் மாற்றியதில் நான் திருப்தி அடைகிறேன்.

ஆளுநருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கடி தம் கொடுக்கப்பட்டவுடன் அவற்றை செயல் படுத்த ஆளுநர் முடிவு செய்தார். அதேபோல, 12 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடிவெ டுத்தால் ஆளுநர் மீதான மரியாதை மேலும் அதி கரிக்கும். தொழிலாளர்கள், சாமானியர்கள் சிவசேனா தலைவரால் வளர்க்கப்பட்ட மக்கள், இன்று இந்த நிலை உண்டானதுக்கு வருத்தப்படுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சூரத் அல்லது கவுகாத்திக்கு செல்வதை விட ‘வர்ஷா’ அல்லது ‘மாதோஸ்ரீ’க்கு வந்திருக்க வேண்டும். நான் அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன், ஆனால் அவர்கள் என்னிடம் வந்திருக்க வேண்டும்.

இந்த திட்டத்தை எதிர்ப்பதாக கூறப்பட்டவர் கள் காங்கிரஸூம், தேசியவாத காங்கிரஸூம்தான். ஆனால் அவர்கள் இன்று என்னுடன் இருக்கி றார்கள். ஒரு அரசாங்கமாக நான் செய்த முதல் வேலை ராய்காட் பாதுகாப்பிற்கு நிதி அளித்தது மற்றும் விவசாயிகளை கடனில் இருந்து விடு வித்தது. அதைவிட, எனது ஆட்சிக் காலத்தில் அவு ரங்காபாத்தை ‘சம்பாஜி நகர்’ என்றும், உஸ்மா னாபாத்தை ‘தாராஷிவ்’ என்றும் அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றியதில் நான் திருப்தி அடைகிறேன்.

ஆளுநருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கடி தம் கொடுக்கப்பட்டவுடன் அவற்றை செயல் படுத்த ஆளுநர் முடிவு செய்தார். அதேபோல, 12 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடிவெ டுத்தால் ஆளுநர் மீதான மரியாதை மேலும் அதிகரிக்கும்.

தொழிலாளர்கள், சாமானியர்கள் சிவசேனா தலைவரால் வளர்க்கப்பட்ட மக்கள், இன்று இந்த நிலை உண்டானதுக்கு வருத்தப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சூரத் அல்லது கவுகாத்திக்கு செல்வதை விட ‘வர்ஷா’ அல்லது ‘மாதோஸ்ரீ’க்கு வந்தி ருக்க வேண்டும். நான் அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன், ஆனால் அவர்கள் என்னிடம் வந்திருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறுக்குவழியை தொடரும் பா.ஜ.க!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி அந்த ஆட்சிகளை கவிழ்ப்பதை பா.ஜ.க வழக்கமாக்கி இருக்கிறது. உத்தரகண்ட், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி என பல மாநிலங்களில் 8 முறை தனது ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் அரங்கேற்றி இருக்கிறது. இந்த அடிப்படையில் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தி லும் பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க - சிவசேனா கட்சிகள் இணைந்து போட்டி யிட்டன.

மொத்தமுள்ள 288 இடங்களில் பெரும் பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க 105 இடங்கள்- சிவசேனா 56 இடங்கள் மொத்தம் 161 இடங்கள் என்ற பெரும்பான்மையை இந்தக் கூட்டணி பெற்றது. எனினும், தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி, பா.ஜ.க முதல்வர் பதவியை தங்களுக்கு ஒதுக்க மறுப்பதாக கூறி, சிவ சேனா கூட்டணியிலிருந்து வெளியேறியது.

54 இடங்களில் வென்றிருந்த தேசியவாத காங்கிரஸ், 44 இடங்களைப் பெற்றிருந்த காங்கி ரஸ் ஆகியவற்றுடன் கைகோர்த்து ‘மகா விகாஸ் அகாதி’ என்ற புதிய கூட்டணியை அமைத்தது. 151 இடங்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கை யுடன் புதிய ஆட்சியை அமைத்தது. 2019 நவம்பர் 28-ஆம் தேதி உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வரானார். ஆனால், இந்தக் கூட்டணி பொருந்தா கூட்டணி. அது விரைவில் உடைந்து விடும் என்று பா.ஜ.க எதிர்பார்த்தது. நாட்கள் கடக்க ஆரம்பித்தன. ஆனால், பா.ஜ.க எதிர்பார்த்தது நடக்கவில்லை.

சிவசேனா ‘இந்துத்துவா’ கட்சி என்றாலும், அது மதச்சார்பற்ற கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணக்கமாகவே பயணித்தது. இத னால் முழு ஆட்சிக் காலத்தையும் இந்தக் கூட்டணி நிறைவு செய்யும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க, மகா விகாஸ் அகாதி கூட்டணியிலுள்ள மூன்று கட்சி களின் தலைவர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் தலைவர் களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, அதன டிப்படையில் பல்வேறு வழக்குகள் போடப் பட்டன.

அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகிய 2 அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதுடன் சிறை யிலும் அடைக்கப்பட்டனர். முதல்வர் உத்தவ் தாக்கரே-வின் உறவினர்களும் குறிவைக்கப்பட்ட னர். சொத்துக்கள் முடக்கப்பட்டன. எனினும் ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட வில்லை.

ஒருகட்டத்தில் வெட்கத்தை விட்டு, பா.ஜ.க நேரடியாகவே சிவசேனாவை மீண்டும் கூட்ட ணிக்கு அழைத்தது. மகா விகாஸ் அகாதி கூட்டணி யை விட்டு வெளியே வருமாறு கூறியது. ஆனால் பலனில்லை. இதையடுத்து சிவசேனா கட்சிக்கு உள்ளேயே ஆள்பிடிக்கும் வேலையில் இறங்கிய பா.ஜ.க, மூத்த தலைவரும், மகாராஷ்டிர நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவருமான ஏக்நாத் ஷிண்டே மூலம் காய்களை நகர்த்தியது. அதில் வெற்றியும் பெற்றது.

சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 50 பேரை பல்வேறு பேரங்களின் அடிப்படையில் தன் வலையில் வீழ்த்திய பா.ஜ.க, அவர்களை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திருப்பி யது. சிவசேனா எம்.எல்.ஏ-க்களை முதலில் குஜராத் மாநிலம் சூரத்திற்கும், பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்திக்கும் அழைத்துச் சென்று சொகுசு ஹோட்டலில் தங்கவைத்து நன்கு ‘கவனித்த’ பா.ஜ.க ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணியிலிருந்து உத்தவ் வெளியே வரவேண்டும்; பாஜகவோடு மீண்டும் கூட்டணி சேரவேண்டும் என்று அவர் களை வைத்தே மிரட்டிப் பார்த்தது. அதற்கு, உத் தவ் தாக்கரே ஒப்புக் கொள்ளவில்லை.

இதையடுத்து, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தனி கோஷ்டியாக உருவாக்கிய பா.ஜ.க, அவர்களின் ஆதரவுடன் தான் நினைத்ததை தற்போது சாதித்துக் கொண்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரசும், சிவசேனாவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, தேசியவாத காங்கி ரசின் சட்டமன்றக் குழுத் தலைவரான அஜித் பவாரை மட்டும் தங்கள் பக்கம் இழுத்து குறுக்கு வழியில் ஆட்சி அமைத்தது. பெரும்பான்மை இருக்கிறதா? என்றெல்லாம் பார்க்காமல் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் தேவேந்திர பட்னாவிஸூக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவார் துணை முதல்வராக்கப்பட்டார்.

ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 5 நாட்களில் பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் சதிவேலையை மட்டும் நிறுத்திக் கொள்ளாத பா.ஜ.க, அன்று அஜித் பவார் என்றால், இந்தமுறை ஏக்நாத் ஷிண்டே மூலம் இரண்டாவது முறையாக குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பிடித்துள்ளது.

நன்றி :- தீக்கதிர்

Related Stories

Related Stories