இந்தியா

மகாராஷ்டிராவில் 2 நகரங்களின் பெயர் மாற்றம்; கடைசி நேரத்தில் புதுவியூகம் வகுத்த தாக்கரே: பின்னணி தெரியுமா?

முன்னதாக தனது ராஜினாமா அறிவிப்புக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டல் 2 நகரங்களின் பெயர் மற்றும் மும்பை விமான நிலையத்தின் பெயர்கள் மாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார் தாக்கரே.

மகாராஷ்டிராவில் 2 நகரங்களின் பெயர் மாற்றம்; கடைசி நேரத்தில் புதுவியூகம் வகுத்த தாக்கரே: பின்னணி தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சி செய்தாத மாநிலங்களில் குதிரை பேர அரசியல் மூலம் ஆட்சியை கழ்விக்கும் வேலையை வாடிக்கையாக வைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. அந்தவகையில்  மகராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பத்தை பா.ஜ.க திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியில் அதிருப்தி அடைந்த சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 35க்கும் மேற்பட்டோர் தங்களின் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்குப் பல்வேறு அழைப்புகள் விடுக்கப்பட்ட, அவை பலனளிக்காத நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரே இறங்கியுள்ளார். மேலும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தாக்கரே.

இதனிடையே மக்களுடை செல்வாக்கு தன்பக்கம் இருந்தாலும், மேலும் மக்களின் ஆதரவை பெற பலவழிமுறையில் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் முன்னதாக தனது ராஜினாமா அறிவிப்புக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டல் 2 நகரங்களின் பெயர் மற்றும் மும்பை விமான நிலையத்தின் பெயர்கள் மாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

அதன்படி, அவுரங்காபாத் நகரம் சம்பாஜிநகர் எனவும், உஸ்மானாபாத் நகரம் தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டதோடு நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னாள் விவசாயிகள் சங்க கட்சி தலைவர் டிபி பாட்டீல் பெயர் சூட்ட கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது இந்த 2 நகரின் பெயரையும் மாற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் இந்து மக்களின் பெரும் பகுதியாக வாக்கினை கவருவதற்கு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories