இந்தியா

"ஆர்.எஸ்.எஸ்ஸின் வெறுப்புக்கு எதிராக இரக்க சித்தாந்தம் ஒன்றிணைகிறது" - ராகுல் காந்தி பேச்சு.!

ஆர்.எஸ்.எஸ்ஸின் கோபம் மற்றும் வெறுப்பு சித்தாந்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் இரக்க சித்தாந்தம் ஒன்றாக நிற்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

"ஆர்.எஸ்.எஸ்ஸின் வெறுப்புக்கு எதிராக இரக்க சித்தாந்தம் ஒன்றிணைகிறது" - ராகுல் காந்தி பேச்சு.!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார்.

"ஆர்.எஸ்.எஸ்ஸின் வெறுப்புக்கு எதிராக இரக்க சித்தாந்தம் ஒன்றிணைகிறது" - ராகுல் காந்தி பேச்சு.!

பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்ட நிலையில், இன்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக சார்பில் எம்.பி திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.

"ஆர்.எஸ்.எஸ்ஸின் வெறுப்புக்கு எதிராக இரக்க சித்தாந்தம் ஒன்றிணைகிறது" - ராகுல் காந்தி பேச்சு.!

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "குடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து யஷ்வந்த் சின்ஹவை ஆதரிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் கோபம் மற்றும் வெறுப்பு சித்தாந்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் இரக்க சித்தாந்தம் ஒன்றாக நிற்கிறது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories