இந்தியா

ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி .. கார்பரேட் நண்பர்களுக்காக வாரி வழங்கிய மோடி அரசு : காங். குற்றச்சாட்டு!

மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார்

ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி .. கார்பரேட் நண்பர்களுக்காக வாரி வழங்கிய மோடி அரசு : காங். குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2014ம் ஆண்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலின் போது பா.ஜ.க.வுக்கு ஏராளமான கார்பரேட் நிறுவனங்கள் நிதிஉதவி அளித்தன. மேலும் மோடி பிரச்சாரத்துக்காக அதானி நிறுவனம் தனி விமானத்தையே அளித்ததாகவும் விமர்சனம் எழுந்தது.

அதன் பின்னர் மோடி ஆட்சிக்கு வந்ததும் தான் ஆட்சிக்கு வர உதவிய தனது நண்பர்களுக்கு அவர் பல்வேறு வகையில் உதவினார். அதிலும் பொதுத்துறை வங்கிகளில் கார்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் அளவில் கடன் வழங்கப்பட்டது.

ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி .. கார்பரேட் நண்பர்களுக்காக வாரி வழங்கிய மோடி அரசு : காங். குற்றச்சாட்டு!

பின்னர் அதில் பல கடன்கள் வாராகடன்களாகி அவை தள்ளுபடி செய்யப்பட்டன. மோடி அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் அதை குறித்து மோடி அரசு கவலைப்படவில்லை.

இந்த சூழலில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.கவுக்கு பெரும் எண்ணிக்கையில் கார்பரேட் நிதிஉதவி குவிந்தது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிய கார்பரேட் முதலாளிகள் சிலர் கடனை திரும்பி கொடுக்காமல் நாட்டை விட்டு தப்பி ஓடினர். இதன் காரணமாக வங்கிகளின் வாராகடன் அதிகரித்து அது வங்கிகளின் சேவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், விஜய், மல்லையா, மெகுல் சொக்கி ஆகியோயர் முறையே 9000, 14000 கோடி மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், டி.எச்.எப்.எல் நிறுவனம் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் ரூ. 27 கோடியை பா.ஜ.க-வுக்கு நன்கொடை அளித்தது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories