இந்தியா

மாநிலங்களை பிரிக்க முடிவு.. விரைவில் 50? : பா.ஜ.க அரசு போடும் அடுத்த குண்டு!

2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்கப் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களை பிரிக்க முடிவு.. விரைவில் 50? : பா.ஜ.க அரசு போடும் அடுத்த குண்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது.

அப்போது, ஒன்றிய அரசின் செய்தி குறிப்பில், எல்.முருகன் பற்றிய அறிமுகத்தில் தமிழ்நாட்டிற்கு பதில், கொங்கு நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பா.ஜ.க தலைவர்களும் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

மாநிலங்களை பிரிக்க முடிவு.. விரைவில் 50? : பா.ஜ.க அரசு போடும் அடுத்த குண்டு!

இவர்களின் மாநில பிரிவினை கோரிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்தை அடுத்து பா.ஜ.கவினர் அமைதிக்காத்தனர். தமிழ்நாட்டைப்போன்றே உத்தர பிரதேசம் உள்ளிட்ட பெரிய மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என பா.ஜ.கவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 2024ம் தேர்தலுக்குப் பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்கப் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டா பெரிய குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.

மாநிலங்களை பிரிக்க முடிவு.. விரைவில் 50? : பா.ஜ.க அரசு போடும் அடுத்த குண்டு!

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் உமேஷ் கட்டா, "2024 தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கர்நாடக மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படும். மேலும் இந்தியாவில் 50 புதிய மாநிலங்களை உருவாக்கப் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இதை அமல்படுத்த உள்ளார்.

மாநிலங்களை பிரிக்க முடிவு.. விரைவில் 50? : பா.ஜ.க அரசு போடும் அடுத்த குண்டு!

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் இரண்டாகப் பிரிக்கப்படும். உத்தர பிரதேசம் மாநிலம் நான்காகப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டாவின் மாநில பிரிவினைப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடுழுவதும் இளைஞர்கள் ஆவேசமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், கர்நாடக அமைச்சரின் இந்த மாநில பிரிவினை பேச்சு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories