இந்தியா

பேண்ட் வாத்திய கட்டணத்தை கொடுப்பது யார்?.. மணமகளின் செயலால் அதிரடி முடிவெடுத்த மணமகன்!

திருமண நிகழ்ச்சியில் பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என்ற தகராரில் திருமணம் நின்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேண்ட் வாத்திய கட்டணத்தை கொடுப்பது யார்?.. மணமகளின் செயலால் அதிரடி முடிவெடுத்த மணமகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்திரப் பிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள மிர்சாபூரில் என்ற இடத்தில் தர்மேந்திரா என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இதற்காக பேண்ட் வாத்திய குழுவினரை மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன் படி திருமண சடங்கு நடந்த போது பேண்ட் வாத்திய குழுவும் திருமணத்துக்கு வந்து பேண்ட் வாத்தியங்களை இசைத்துள்ளனர்.

பேண்ட் வாத்திய கட்டணத்தை கொடுப்பது யார்?.. மணமகளின் செயலால் அதிரடி முடிவெடுத்த மணமகன்!

அதன்பின்னர் பேண்ட் வாத்திய குழுவினர் மணமகன் வீட்டாரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு மணமகள் வீட்டார் பணம் கொடுக்க வேண்டும் என மணமகன் வீட்டார் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார், பேண்ட் வாத்திய குழுவை தாங்கள் அழைக்கவில்லை எனக் கூறி பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மணமகன் வீட்டாரின் இந்த செயலால் மணமகளும் தனது வீட்டாருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பேண்ட் வாத்திய கட்டணத்தை கொடுப்பது யார்?.. மணமகளின் செயலால் அதிரடி முடிவெடுத்த மணமகன்!

இதனால் ஆத்திரமடைந்த மணமகன், இந்த திருமணம் வேண்டாம் எனக் கூறி மணமேடையில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக செய்வதறியாது திகைத்த மணமகள் வீட்டாரும் பின்னர் மணமகளுடன் அங்கிருந்து வெளியேறினர்.

ஆனால் பேண்ட் வாத்திய குழுவினருக்கு காசு கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை.

banner

Related Stories

Related Stories