இந்தியா

காஷ்மீர் பாகிஸ்தானுக்கா? சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் வெடித்த சர்ச்சை!

சிவில் சர்வீஸ் தேர்வில் காஷ்மீர் குறித்து கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

காஷ்மீர் பாகிஸ்தானுக்கா? சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் வெடித்த சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வி அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காஷ்மீர் குறித்த கேள்வியால் தேர்வு எழுதிய மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த தேர்வில் 'காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா' என்ற கேள்வி எழுந்ததுதான் இத்தனை சர்ச்சைக்கும் காரணமாக அமைந்துள்ளது. அதிலும் அந்த கேள்வியுடன் இரண்டு வாதங்கள் கொடுக்கப்பட்டு பதிலுக்கு நான்கு ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டிருந்தது.

காஷ்மீர் பாகிஸ்தானுக்கா? சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் வெடித்த சர்ச்சை!

அதாவது முதலில் ஆம், இந்தியாவின் பணத்தை சேமிக்கும் என்ற வாதமும், இல்லை. இதுபோன்ற முடிவு மேற்கொண்டு இதுபோன்ற கோரிக்கைகள் அதிகரிக்கச் செய்யும் என்ற வாதமும் அதில் இடம்பெற்றுள்ளது.

மேலும் பதிலுக்கான நான்கு ஆப்ஷன்களாக, "A. வாதம் 1 வலிமையானது , B. வாதம் 2 வலிமையானது, C. இரண்டு வாதங்களும் வலிமையற்றது, D. இரண்டு வாதங்களும் வலிமையற்றது” போன்றவை இடம்பெற்றுள்ளது.

காஷ்மீர் பாகிஸ்தானுக்கா? சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் வெடித்த சர்ச்சை!

இந்த கேள்வியும் அதற்காக ஆப்ஷன்களும் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கேள்வித்தாளை உருவாக்கிய இரண்டு நிபுணர்களும் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories