இந்தியா

"பசித்த குழந்தைக்கு உணவு கொடுக்க மறுத்த இண்டிகோ நிறுவனம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை!

கார்ப்பரேட் வாடிக்கையாளருக்கு முதலில் முன்னுரிமை கொடுப்போம் என விமான பணியாளர்கள் கூறியதாக ஒருவர் புகார் அளித்துள்ளார்.

"பசித்த குழந்தைக்கு உணவு கொடுக்க மறுத்த இண்டிகோ நிறுவனம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இண்டிகோ விமானத்தில் ஒருவர் தனது 6 வயது மகளுடன் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது குழந்தைக்கு பசியால்அழத்தொடங்கியுள்ளது. உடனே விமான பணியாளர்களை அழைத்த அந்த நபர் தனது குழந்தைக்கு பசிக்கிறது ஏதேனும் உணவு இருந்தால் கொடுங்கள் , அதற்கான விலையை நான் செலுத்தி விடுகிறேன் என கூறியுள்ளார்.

பலமுறை இது குறித்து கூறிய நிலையில், விமானத்தில் இருக்கும் கார்ப்பரேட் வாடிக்கையாளருக்குதான் முதலில் சேவை செய்ய வேண்டும் என விமான ஊழியர்கள் கூறியுள்ளனர். மேலும் இறுதி வரை அவரது மகளுக்கு உணவு தரவில்லை.

இதன் காரணமாக இந்த நிகழ்வுகளை அந்த நபர் ட்விட்டரில் பதிவு செய்த நிலையில் பலரும் இண்டிகோ விமான நிறுவனத்தை விமர்சித்துள்ளனர். மேலும் அவரது ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் நடந்த இந்த சம்பவத்துக்கு இண்டிகோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அந்த நிறுவனம், "நீங்கள் சந்தித்த பிரச்சனையை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. உங்களது குழந்தை தற்போது நலமாக இருப்பார் என நம்புகிறோம்.நாங்கள் இந்த புகாரை சரிபார்த்து, உங்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு தொடர்புக்கொள்கிறோம் ' என கூறியுள்ளது.

விமான நிறுவனம் கார்ப்பரேட் வாடிக்கையாளருக்கு முதலில் முன்னுரிமை கொடுப்போம் எனக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இண்டிகோ நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே IndiGo சிறுவனம் மாற்றுத்திறனாளி சிறுவனை விமானத்தில் ஏற்ற மறுத்து சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories