மும்பையில் மது விருந்து முடித்துவிட்டு மூன்று பெண்கள், ஓலா காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த பெண் ஒருவர் , ஓட்டுநருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், சாலையில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் இவர்கள் குறித்து புகார் அளித்துள்ளார். பிறகு போலிஸார் மூன்று பேரையும் காரில் இருந்து கீழே இறக்கி விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் போலிஸாரை தாக்க முயன்றுள்ளார். மேலும் சாலையின் நடுவில் அமர்ந்த கொண்டு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். அவரை கட்டுப்படுத்த நினைத்த நினைத்த தோழியையும் அவர் அடித்துள்ளார். மேலும் போலிஸாரால் எனக்கு எதுவும் ஆகாது என உளறிக்கொண்டே இருந்துள்ளார்.
அந்தப் பெண் குடிபோதையில் நள்ளிரவில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் மார்ச் 25ம் தேதி நடந்துள்ளது. குடிபோதையில் ரகளை செய்த அந்த பெண் உட்பட அவரின் 2 தோழிகள் மீதும் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.