இந்தியா

நொடிபொழுது தாமதித்து இருந்தாலும் .. மூதாட்டி உயிரை காப்பாற்றிய போலிஸ்: திக் திக் வீடியோ!

ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய ரயில்வே போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நொடிபொழுது தாமதித்து இருந்தாலும் .. மூதாட்டி உயிரை காப்பாற்றிய போலிஸ்: திக் திக் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லலித்புர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தைக் கடந்து நடைமேடைக்கு வர முயன்றுள்ளார். அப்போது அதே தண்டவாளத்தில் வேகமான விரைவு ரயில் ஒன்று வந்துள்ளது.

இதைக் கண்ட ரயில்வே போலிஸார் ஒருவர் அந்த பெண்ணை தண்டவாளத்தைக் கடக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனால் அதை கவனிக்காத அந்த வயதான பெண் தண்டவாளத்தைக் கடந்துள்ளார்.

உடேன ரயில்வே போலிஸ் துரிதமாக செய்யப்பட்டு பாய்ந்து சென்று மூதாட்டியை நடைமேடைக்கு இழுத்து அவரது உயிரைக் காப்பாற்றினார். போலிஸார் சில நொடிகள் தாமதமாக செயல்பட்டிருந்தால் கூட மூதாட்டி ரயிலில் ரயில் மோதி உயிரிழந்திருப்பார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய போலிஸாருக்கு பாராட்டு தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories