இந்தியா

பறவை மோதியதில் நடுவானில் தீ பிடித்த விமானம்.. 185 பயணிகள் நிலை என்ன?

பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தின் மீது பறவை மோதியால் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறவை மோதியதில் நடுவானில் தீ பிடித்த விமானம்.. 185 பயணிகள் நிலை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாட்னா விமான நிலையத்திலிருந்து 185 பயணிகளுடன் டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென தீ பிடித்துள்ளது. இதைக் கவனித்த விமான ஓட்டுனர் உடனே விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்துள்ளார்.

பிறகு பாட்னா விமான நிலையத்திலேயே மீண்டும் விமானம் தரையிறங்கியது. இதையடுத்து 185 பயணிகளும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் தீ பிடித்தது குறித்து விசாரணை செய்தபோது, நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, பறவை வந்து மோதியதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

பறவை மோதியதில் நடுவானில் தீ பிடித்த விமானம்.. 185 பயணிகள் நிலை என்ன?

இந்த சம்பவம் குறித்து விமான அதிகாரி கூறுகையில், "விமானத்தில் தீ பற்றியதை உள்ளூர் வாசிகள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். பிறகு உடனே விமானம் பாட்னா விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது" என தெரிவித்துள்ளார்.

விமானம் புகையுடன் தரையிறங்குவதைப் பார்த்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories