இந்தியா

கேங் வார் சண்டை.. சாலையிலேயே மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. 20 பேர் கொண்ட கும்பலால் நடந்த பரபரப்பு!

பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மாணவனை 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேங் வார் சண்டை.. சாலையிலேயே மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. 20 பேர் கொண்ட கும்பலால் நடந்த பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே, ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து பேருந்து நிருத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மாணவனை சக மாணவர்கள் சுமார் 20 பேர் கும்பல் சாலையில் வைத்து சரமாரியாக தாக்கினர்.

கேங் வார் சண்டை.. சாலையிலேயே மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. 20 பேர் கொண்ட கும்பலால் நடந்த பரபரப்பு!

அருகிலிருந்தவர்கள் தடுக்க முற்பட்டபோதும் அந்த மாணவனை விடமால் அடித்து துன்புறுத்தினர். இதில் படுகாயமடைந்த 11-ம் வகுப்பு படிக்கும் டேனியல் மாணவன் என்ற, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேங் வார் சண்டை.. சாலையிலேயே மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. 20 பேர் கொண்ட கும்பலால் நடந்த பரபரப்பு!

பின்னர் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, மாணவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதோடு அவர்களின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சாலையில் வைத்து பள்ளி மாணவனை தாக்கிய சம்பவம் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

banner

Related Stories

Related Stories