இந்தியா

தட்கல் டிக்கெட் விதிகளில் மாற்றம்.. ரயில்வே துறை வெளியிட்ட 10 முக்கிய புதிய சலுகைகள் என்ன?

ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50% தொகை பயணிகளுக்குத் திருப்பித் தரப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தட்கல் டிக்கெட் விதிகளில் மாற்றம்.. ரயில்வே துறை வெளியிட்ட 10 முக்கிய புதிய சலுகைகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்த அடுத்து ரயில்வே துறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. உதாரணத்திற்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணத்தில் சலுகை போன்றவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஜூலை 1ம் தேதி முதல் புதிய சட்டணச் சலுகைகளுடன் பல்வேறு புதிய அறிவிப்புகளை இந்திய ரயில்வே துறை அமல்படுத்த உள்ளது.

இதன் விபரங்களை பார்ப்போம்:-

ரயில் பயணிகளுக்கு இனி காத்திருப்பு பட்டியல் இருக்காது. அதற்குப் பதில் பயணிகளின் டிக்கெட் சுவிதா ரயில்களில் உறுதி செய்யப்பட்டு டிக்கெட் வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 10 அல்லது 20% வரை மட்டுமே கட்டணம் திருப்பி தரப்பட்டு வந்தநிலையில், தற்போது 50% வரை கட்டணம் திருப்பி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தட்கல் டிக்கெட் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. AC டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை முன்பதிவு செய்யப்படும். 2ம் வகுப்பு பயணிகளுக்குக் காலை 11 மணி முதல் 12 மணி வரை முன்பதிவு செய்யப்படும்.

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 %, 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்வே சலுகைகள் மீண்டும் அமலுக்கு வருகிறது.

ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும், ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்ற வேண்டும் எனவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக IRCTC இணையத்தில் போர்டிங் பாயிண்ட் சேஞ்ச் என்ற வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

நல்லாசிரியர் மற்றும் கல்வித்துறைக்காகக் குடியரசுத் தலைவரிடம் விருதுபெறும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் வகுப்பில் 50% சலுகை வழங்கப்படும் என பல்வேறு புதிய சலுகைகளை இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories