இந்தியா

’என்ன முறைக்கிற’.. பீட்சா டெலிவரி பெண்ணை தாக்கிய 4 பெண்கள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

மத்திய பிரதேசத்தில் பீட்சா டெலிவரி பெண்ணை, 4 பெண்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’என்ன முறைக்கிற’..  பீட்சா டெலிவரி பெண்ணை தாக்கிய 4 பெண்கள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஒரு பெண்ணை, 4 பெண்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அங்குள்ள பீட்சா கடை ஒன்றில் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். அவர் தங்களை முறைத்துப் பார்த்தாக கூறி அந்த 4 பெண்களும் சரமாரியாக சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்த கும்பல் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளுகிறது. பிறகு மற்றொரு பெண் கட்டையால் தாக்குகிறார். அடிதாங்க முடியாமல் அந்தப் பெண் போலிஸாரை அழைப்பதாகக் கூறுவதுபோன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த அதிர்ச்சி வீடியோ வைரலானதை அடுத்து போலிஸார் அந்த 4 பெண்கள் மீதும் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை அடையாளம் காணமும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த 4 பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories