இந்தியா

”நான் யார் தெரியுமா.. காரை சிக்னல்ல நிறுத்த முடியாது”: போலிஸாரிடம் வாக்குவாதம் செய்த பா.ஜ.க MLA மகள்!

கர்நாடகாவில், சிக்னலில் நிற்காமல் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் மகள் போக்குவரத்து போலிஸாரிடம் வாக்கு வாத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”நான் யார் தெரியுமா.. காரை சிக்னல்ல நிறுத்த முடியாது”: போலிஸாரிடம் வாக்குவாதம் செய்த பா.ஜ.க MLA மகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநில, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் அர்விந்த் நிம்பவாலி. இவரது மகள் அண்மையில் நண்பர்களுடன் BMW சொகுசு காரில் ராஜ் பவன் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர், காரை போக்குவரத்து சிக்கனில் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலிஸார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி அவரிடம் அபராதம் கேட்டுள்ளனர்.

ஆனால், அவர் அபராதம் செலுத்த மறுத்து நான் MLA-வின் மகள், MLA-வின் வாகனங்கள் எல்லாம் போக்குவரத்து சிக்னலில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த சம்பத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளர்களையும் அவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதையடுத்து போலிஸார் அபராத தொகையைச் செலுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினர். அப்போது வாகனத்துக்குள் சென்ற அவர் "இப்போது என்னிடம் பணம் இல்லை, தயவுசெய்து யாரையாவது வீட்டிற்கு அனுப்புங்கள். அபராதத்தை நான் செலுத்துகிறேன்," என்று கூறியுள்ளார்.

இதற்கு போலிஸார், ஆன்லைனிலும் பணம் செலுத்தலாம் என்று கூறிய பின்னர் அவர் அபராத தொகையைச் செலுத்திய பிறகு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிய அர்விந்த் நிம்பவாலி,"ராஜ் பவன் அருகே எனது மகளும் அவரது நண்பர்களும் காரில் அதிவேகமாகச் சென்றதாக போலிஸார் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். அப்போது எனது மகள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது. நானும் வீடியோ பார்த்தேன். எங்கள் குடும்ப அப்படிப்பட்டது இல்லை. என் மகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், மகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதற்கு போலிஸார், ஆன்லைனிலும் பணம் செலுத்தலாம் என்று கூறிய பின்னர் அவர் அபராத தொகையை செலுத்திய பிறகு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அர்விந்த் நிம்பவாலி,"ராஜ் பவன் அருகே எனது மகளும் அவரது நண்பர்களும் காரில் அதிவேகமாக சென்றதாக போலிஸார் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். அப்போது எனது மகள் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது. நானும் வீடியோ பார்த்தேன். எங்கள் குடும்ப அப்படிபட்டது இல்லை. என் மகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், மகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories