இந்தியா

மசூதியை வைத்து வன்முறையை தூண்ட சதி.. கர்நாடகாவில் 144 தடை.. துணை ராணுவ படை குவிப்பு : பின்னணி என்ன?

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ஹனுமன் கோவிலை இடித்துவிட்டு ஜமியா மசூதி கட்டப்பட்டதாக கூறி வி.ஹேச்.பி அமைப்பினர் பேரணி நடத்த அழைப்பு விடுத்ததை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மசூதியை வைத்து வன்முறையை தூண்ட சதி.. கர்நாடகாவில் 144 தடை.. துணை ராணுவ படை குவிப்பு : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டனா தாலுக்காவில் ஹனுமன் கோவிலை இடித்துவிட்டு ஜமியா மசூதி கட்டப்பட்டதாக கூறி வி.ஹேச்.பி அமைப்பினர் பேரணி நடத்த அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா தாலுக்காவில் உள்ள ஜமியா மசூதியானது ஹனுமன் கோவிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாகவும், மசூதியின் உள்ளே விநாயகர் கோவில் உள்ளதாகவும் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று பேரணி நடத்தவும், மசூதியில் பூஜை செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை அடுத்து ஸ்ரீரங்கபட்டன தாலுக்காவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு பேரணிகள், ஊர்வலங்கள், பொது கூட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட போலிஸார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தல் அமைப்பினர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு பேரணியாக வந்தவனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் ஸ்ரீரங்கபட்டனா தாலுக்காவில் பெறும் பதற்றம் நிலவி வருகிறது.

banner

Related Stories

Related Stories