இந்தியா

"இந்தியா திராவிடர்களுக்கே சொந்தம்.. வேறு யாருக்கும் உரிமையில்லை": அசாதுதீன் ஓவைசி பேச்சு!

இந்தியா திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான் சொந்தம் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

"இந்தியா திராவிடர்களுக்கே சொந்தம்.. வேறு யாருக்கும் உரிமையில்லை": அசாதுதீன் ஓவைசி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாவில் 10ம் வகுப்பு அரசு பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்து சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்தியாவின் பூர்வ குடிகள் திராவிடர்கள்தான். இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மறைக்கப்பார்க்கிறது என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தாராமையா தெரிவித்திருந்தார். இந்நிலையில்,இந்தியா திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான் சொந்தம் என அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியும், சித்தாராமையாவின் ஒத்தக்கருத்தையே பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பாய்வாடியில் நடைபெற்ற நிகழ்வில் அசாதுதீன் ஓவைசி, "இந்தியா என்னுடையதோ, தாக்கரேவின் உடையதோ, மோடியுடையதோ, அமித்ஷாவினுடையதோ அல்ல. இந்தியா யாருக்காவது சொந்தமென்றால் அது திராவிடர்களுக்கும் , ஆதிவாசிகளுக்கும்தான். பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆகியவை முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை. ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories