இந்தியா

முதலமைச்சர் முன்னிலையில் புதிய திட்டங்கள் தொடக்கம் : பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ள 6 திட்டங்கள் என்னென்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 31,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

முதலமைச்சர் முன்னிலையில் புதிய திட்டங்கள் தொடக்கம் : பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ள 6 திட்டங்கள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி இன்று (26.5.2022 வியாழக்கிழமை) ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 31,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்க ஒன்றிய மற்றும் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் துவக்கி வைக்க இருக்கும்தமிழகத்திற்கான திட்டங்கள் வருமாறு

1. எண்ணூர் செங்கல்பட்டு இடையே ரூ 850 கோடியில் 11 கிலோட்டர் நீளம் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை எரிகாற்றுக் குழாய்.

2. திருவள்ளூர் பெங்களூரு இடையே 217 கிலோமீட்டர் நீளத்திற்கு 910 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை எரிகாற்றுக் குழாய்.

3. சென்னை பெங்களூரு இடையே 262 கிலோமீட்டர் நீளம் 14,870 கோடி செலவில் விரைவுச் சாலை அமைத்தல்.

4. சென்னை துறைமுகம்/ மதுரவாயல் இடையே 21 கிலோமீட்டர் நீளம் 5850 கோடி செலவில் 4 வழிகளுடன் கூடிய இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைத்தல்.

5. தர்மபுரி / நேரலுரு இடையே, 94 கிலோமீட்டர் தொலைவு 3870 கோடி செலவில் 4 வழிச்சாலை.

6. சிதம்பரம் / மீன்சுருட்டி இடையே ரூ 720 கோடி செலவில் 31 கிலோமீட்டர் நீளத்திற்கு நடைவழிகளுடன் கூடிய இருவழிச்சாலை அமைத்தல்.

7. சென்னையில் ரூ 1400 கோடி மதிப்பில் பன்முக தளவாட பூங்கா அமைத்தல்.

8. சென்னை எழும்பூர், இராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 தொடரி நிலையங்கள், 1800 கோடி செலவில் உலகத் தரத்திற்கு மேம்படுத்துதல்.

9. 75 கி.மீ தொலைவுள்ள ரூ. 500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை தேனி இடையேயான (அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம்) ரயில் தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார். இந்தத் திட்டம் இந்தப் பகுதிகளில் உள்ள சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த வழிவகுக்கும்.

banner

Related Stories

Related Stories