இந்தியா

“வீரர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்ட IAS அதிகாரி” : டெல்லி முதல்வர் அதிரடி உத்தரவு !

டெல்லியில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது நாயுடன் நடைப்பயிற்சி செய்வதற்காக மைதானத்தில் இருந்து விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“வீரர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்ட IAS அதிகாரி” : டெல்லி முதல்வர் அதிரடி உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் தியாகராஜ் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்குத் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால் இந்த மைதானம் வழக்கமாக இரவு 9 மணிவரை எப்போதும் திறந்திருக்கும்.

இந்நிலையில், சஞ்சீவ் கிர்வார் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது நாயுடன் நடைபயிற்சி செய்வதற்காக இரவு 7 மணிக்குள் அனைத்து விளையாட்டு வீரர்களும் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என தியாகராஜ் விளையாட்டு மைதான நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

இதனால், விளையாட்டு மைதானத்தின் பாதுகாவலர்கள் 7 மணிக்குள்ளே வீரர்களை வெளியேற்றி வந்துள்ளனர். இது குறித்து வீரர்கள் புகார் எழுப்பி வந்துள்ளனர். இந்நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் தனது நாயுடன் மைதானத்தில் நடைபயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவே இது தொடர்பான செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் இப்பிரச்சனை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் இனி இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories