இந்தியா

“மீண்டும் கட்டணம் உயர்வு.. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Airtel” - எவ்வளவு தெரியுமா?

அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்தப்போவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.

“மீண்டும் கட்டணம் உயர்வு..  வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Airtel” - எவ்வளவு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெலிக்காம் நிறுவனங்களான வோடாபோன், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்டவைகள் கடந்த ஆண்டு தங்களது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்களின் கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்தது. இந்நிலையில் மீண்டும் தங்களது வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தப்போவதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபால் விட்டல், தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோபால் விட்டல், "5ஜி ரிவர்ஸ் விலைகளுக்கான டிராயின் பரிந்துரையில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை. இதனால் இந்த ஆண்டில் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வரை வசூலிக்க வேண்டும். இந்த கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் கட்டண உயர்வை அடுத்து ஜியோ, வோடாபோன் ஆகிய நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை உயர்த்துமோ என அதன் வாடிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories