இந்தியா

பெயரளவில் மட்டுமே உஜ்வாலா திட்டம்.. செயலில் ஒன்னும் காணோம்.. கடுப்பான 90 லட்சம் மக்கள்!

ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தை மீண்டும் 90 லட்சம் மக்கள் பயன்படுத்தவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

பெயரளவில் மட்டுமே உஜ்வாலா திட்டம்.. செயலில் ஒன்னும் காணோம்.. கடுப்பான 90 லட்சம் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தில் உள்ள 90 லட்சம் பயனாளிகள் மீண்டும் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு 'பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் தொடக்கிவைத்தார்.

மேலும் இந்த திட்டத்தில் 2020ம் ஆண்டுக்குள் 8 கோடி பயனாளர்கள் இணைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து 8 கோடி பயனாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்ததை அடுத்து இந்த ஆண்டு உஜ்வாலா 2.0 திட்டத்தையும் ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த உஜ்வாலா 2.0 திட்டத்தில் சிலிண்டருடன், அடுப்பையும் ஒரு கோடி பேருக்கு வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்தோர் குறித்து சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டுள்ளார். இவரின் இந்த கேள்விக்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HBCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BBCL) ஆகிய மூன்று நிறுவனங்கள் பதிலளித்துள்ளன.

அதில், "உஜ்வாலா திட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 90 லட்சம் பயனாளிகள் தங்களுக்கு வழங்கிய சிலிண்டர்கள் காலியான பிறகு மீண்டும் அதை பயன்படுத்தவில்லை என்றும் 2021 மார்ச் வரை 65 லட்சம் பேர் மீண்டும் சிலிண்டர் வாங்காமல் உள்ளனர் என்றும், ஒரு கோடி பேர் ஒரே ஒரு முறை மட்டுமே மறு சிலிண்டர் வாங்கியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயரளவில் மட்டுமே உஜ்வாலா திட்டம்.. செயலில் ஒன்னும் காணோம்.. கடுப்பான 90 லட்சம் மக்கள்!

இந்த திட்டத்தின் பயனர்கள் 90 லட்சம் பேர் மீண்டும் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தாதற்கு, மாதம் மாதம் கிடுகிடுவென உயர்ந்து வரும் சிலிண்டர் விலையே காரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியமும் அவர்களுக்குச் சரியாக வழங்கப்படவில்லை.

இதன் காரணமாகவே மோடி அரசு கொண்டு வந்த உஜ்வாலா திட்டத்திலிருந்து 90 லட்சம் பேர் மீண்டும் பயன்படுத்தவில்லை என்பது தெரியவருகிறது. ம் இது மோடி அரசு மீது மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

அதேபோல், சிலிண்டருக்கு மானியம் வழங்குவதாக ஒன்றிய அரசு கூறினாலும் அது பயனாளர்களின் கைகளுக்குச் சரியாகப் போய்ச் சேருவதில்லை. இதனால் பொதுமக்கள் முழு தொகையை தாங்களே கொடுக்கவேண்டியுள்ளது. இதனால் இந்த உஜ்வாலா திட்டத்தில் பெரிய முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

banner

Related Stories

Related Stories