இந்தியா

”நம்பி வாக்களித்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது பா.ஜ.க” : மோடி அரசை கடுமையாக சாடிய உத்தவ் தாக்ரே!

பா.ஜ.கவில் இணைந்தால் தாவூத் இப்ராஹிம் கூட புனிதராகிவிடுவார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

”நம்பி வாக்களித்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது பா.ஜ.க” : மோடி அரசை கடுமையாக சாடிய உத்தவ் தாக்ரே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையில் சிவசேனா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே கலந்து கொண்டு ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்ரே, "நான் முதல்வராகப் பதவியேற்றபோது எனக்கு அரசை வழிநடத்தத் தெரியாது என பா.ஜ.கவினர் விமர்சனம் செய்தனர்.

எங்கள் அரசைக் கவிழ்க்க பா.ஜ.கவினர் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். ஆனால் இன்றோ இந்த அரசு எப்படி செயல்படுகிறது என கேட்கிறார்கள். பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமை ஒன்றிய அரசு தேடிவருகிறது. ஒருவேலை இவர் பா.ஜ.கவில் சேர்ந்துவிட்டால் ஒரே இரவில் தாவூத் இப்ராஹிம் புனிதராகிவிடுவார்.

இந்தியாவில் சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படி இருக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி கொடுக்கும் ரேசன் பொருட்களைப் பச்சையாகவா சாப்பிட முடியும்? இந்திய நாட்டின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இவர்களை நம்பி வாக்களித்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது பா.ஜ.க" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories