இந்தியா

இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.. போலிஸாரை தாக்க முயற்சி - தமிழ்நாட்டில் பதுங்கிருந்த போலி சாமியார் கைது!

கர்நாடகாவில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.. போலிஸாரை தாக்க முயற்சி - தமிழ்நாட்டில் பதுங்கிருந்த போலி சாமியார் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடகாவில் இளம்பெண் மீது திராவகம் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார். பெங்களூர் அழைத்து செல்லும் வழியில் போலிஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் இளைஞரை போலிஸார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் சுங்கதகட்டேயில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார். இந்த நிலையில் இளம்பெண்ணை, நாகேஷ் (வயது 29) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் தனது காதல் குறித்து இளம்பெண்ணிடம் நாகேஷ் கூறியுள்ளார். ஆனால் நாகேஷின் காதலை ஏற்க இளம்பெண் மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நாகேஷ் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி, நிதி நிறுவனம் முன்பு வைத்து இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காமாட்சிபாளையா போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நாகேஷை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களில் தேடிவந்தனர்.

குறிப்பாக நாகேஷ் ஆன்மிகவாதி என்று கூறப்பட்டதால் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திராவில் உள்ள கோவில்களில் நாகேசை போலிஸார் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் நாகேஷ் பதுங்கி இருப்பதாக காமாட்சிபாளையா போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அந்த ஆசிரமத்திற்கு சென்று போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது காவி உடை அணிந்து இருந்த ஒரு வாலிபரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அவரை பிடித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் நாகேஷ் என்பதும், இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு ஆசிரமத்திற்கு பக்தர்போல் வேடம் அணிந்து வந்து தங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.

அப்போது ஹெங்கேரி தொங்கு பாலம் அருகே வந்த போது குற்றவாளி நாகேஷ் போலிஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். இதனை அடுத்து போலிஸார் தப்ப முயன்ற நாகேஷின் வலது காலில் துப்பாக்கியல சுட்டு பிடித்தனர். இதனை அடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories