இந்தியா

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. இளம் பெண்ணின் ஆபாச படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய முன்னாள் காதலன்!

புதுச்சேரியில் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் அடைந்து இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபரை போலிசார் கைது செய்தனர்.

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. இளம் பெண்ணின் ஆபாச படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய முன்னாள் காதலன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (24). இவர் வில்லியனூரில் காய்கறிகடை நடத்தி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். நாளடைவில் ஜெயக்குமாரும் அந்த பெண்ணும் நெருங்கி பழகியதால் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இதற்கிடையே ஜெயக்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் ஜெயக்குமாருடன் பழகுவதை தவிர்க்க அந்த பெண் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.

மேலும் இதற்கு சம்மதிக்காவிட்டால் தனிமையில் ஒன்றாக இருந்த ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கு அந்த பெண் பணியவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த ஆபாச படத்தை அவரது உறவினர்களுக்கும் சமூகவலைதளத்திலும் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் வில்லியனூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories