இந்தியா

கணவனுடன் வீடு திரும்பிய தலித் பெண்ணுக்கு பலாத்கார முயற்சி: கர்நாடக உள்துறை அமைச்சர் சொந்த ஊரில் பயங்கரம்!

கணவரை தாக்கிவிட்டு அந்த இளம்பெண்ணை அருகில் இருந்த ரப்பர் தோட்டத்திற்குச் இழுத்துச்சென்று பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கணவனுடன் வீடு திரும்பிய தலித் பெண்ணுக்கு பலாத்கார முயற்சி: கர்நாடக உள்துறை அமைச்சர் சொந்த ஊரில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநில உள்துறை அமைச்சரின் சொந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை பலாத்கார செய்ய முயற்சித்த 4 பேர் கொண்ட கும்பலில் இருவர் கைது. இருவர் தப்பி ஓட்டம்.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா அரகா கிராமத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் அங்குள்ள தீர்த்தஹள்ளி டவுன் சென்று விட்டு பின்னர் இவர் சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு வீடு திரும்பியபோது 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை தடுத்து பெண்ணுடன் வந்த கணவரை தாக்கிவிட்டு அந்த இளம்பெண்ணை அருகில் இருந்த ரப்பர் தோட்டத்திற்குச் இழுத்துச்சென்று பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த பெண் சத்தமிட்டதால் அங்கிருந்த மற்ற நபர்கள் கூடி அவர்களை துரத்தினர். இது சம்பந்தமாக தீர்த்தஹள்ளி போலிஸார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்து மேலும் தப்பியோடிய இருவரை தேடிவருவதாக சிவமொக்கா போலிஸ் சூப்பிரண்டு லட்சுமிபிரசாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்தெரிவித்துள்ளார்.

மாநில உள்துறை அமைச்சரின் சொந்த கிராமத்திலேயே கூட்டு பாலியல் பலாத்கார முயற்சி நடந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories